
திருப்பூர்: டாஸ்மாக் கடை இயங்கி வந்த இடத்தில், போலியாக மதுக் கடை நடத்திய ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் ஏற்கெனவே அரசு சாராயக் கடையான ‘டாஸ்மாக்’ இயங்கி வந்த இடத்தில் முறைகேடாக ஒருவர் மதுக்கடை நடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து, அங்கே திடீரென ஆய்வு மேற்கொண்டார் மதுவிலக்கு உதவி ஆணையர் சக்திவேல்.
அப்போது, டாஸ்மாக் கடை இயங்கி வந்த இடத்தில், முறைகேடாக ஒரு மதுக்கடையை கமல்ராஜ் என்பவர் நடத்தி வருவது கண்டறியப் பட்டது. இதை அடுத்து, திடீர் ஆய்வு மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கடையை அகற்றினார் மதுவிலக்கு உதவி ஆணையர் சக்திவேல். மேலும், கடை நடத்தி வந்த கமல் ராஜ் என்பவரை காவல்துறையிடம் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.



