சபரிமலை விவகாரத்தில் பெரும்பான்மை பக்தர்களின் பக்கமே மத்திய அரசு நிற்கும்!

சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

pon radhakrishnan - 2026

சபரிமலை விவகாரத்தில் பெரும்பான்மையான பக்தர்களின் பக்கமே மத்திய அரசு நிற்கும் என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், பட்டாசு வெடித்தல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னை குறித்து கேட்கப் பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

பட்டாசு வெடிப்பது தொடர்பாக நான் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கவில்லை. மக்களின் போராட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டும்! பட்டாசு வெடிப்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகளே.

அதைப் போன்று நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பான குற்றச்சாட்டு எழுப்புபவர்களும் குழந்தைத்தனம் கொண்டவர்களே.. என்று கூறினார்.

மேலும், சபரிமலை விவகாரத்தில், பெரும்பான்மை பக்தர்களின் பக்கமே மத்திய அரசு நிற்கும் என்று உறுதிபடக் கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.