ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு..

Published:

images 27 3 - 2026
  • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,160-க்கு விற்பனையாகிறது.
  • வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 4 நாட்களாகவே குறைந்து வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலை சற்று அதிகமாகவே இருந்தது.

கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38,640-க்கு விற்கப்பட்டது. 22-ந்தேதி அது ரூ.38,520 ஆக குறைந்தது. 23-ந்தேதி மீண்டும் ரூ.38,400 ஆக குறைந்தது. 24-ந்தேதி சற்று அதிகரித்து ரூ.38,440 ஆக விற்கப்பட்டது.

மறுநாள் 25-ந்தேதி அதிரடியாக உயர்ந்து ரூ.38,800 ஆனது. அதன் பிறகு தங்கம் விலை குறையத்தொடங்கியது. 26-ந்தேதி அது ரூ.38,560 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் மீண்டும் குறைந்து ரூ.38,440-க்கு விற்றது. நேற்று அதேவிலையில் நீடித்தது.

இந்தநிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,805-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4,770-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.60.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img