வாஜ்பாயின் முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை உறவினர் ஒருவரின் வீட்டிலே பார்த்து அப்போ எனக்கு தெரிந்த இந்தியை கொண்டு மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன்.
பள்ளி முடிவு என்பதால் இந்தியும் சமஸ்கிருதமும் படித்துக் கொண்டிருந்த காலம். கல்லூரியிலே சேர்ந்த பின்னர் உப்புமா கூட்டணி ஆட்சியிலே இருந்து செய்த கோமாளிக் கூத்துக்களை இந்த மானங்கெட்ட ஊடகங்களின் வழியாக படிக்க வேண்டியிருந்தது.
வாஜ்பாயின் இரண்டாம் முறை பதவி ஏற்பு மற்றும் ஆட்சியை பற்றி இந்த ஊடகங்கள் என்னென்ன எழுதின என்பது இன்னமும் வரிக்கு வரி நினைவிருக்கிறது.
அப்துல் கலாமை பாம்ப் டாடி என கேடுகெட்ட ஊடகங்கள் வசை பாடியதை இன்று வரை மறக்க முடியவில்லை.
வாஜ்பாயி பல நல்லதுகளை செய்திருந்தாலும் ஊடகங்கள் அவரை வில்லனாகவே சித்திரித்தன. இன்றைக்கு மோடி ஊடகங்களை கிட்டே அண்ட விடமால் இருப்பதுமே வாஜ்பாயின் காலத்திய படிப்பினை தான்.
அணு ஆயுத சோதனை நடத்தினால் பெரிய எதிர்ப்பு இருக்காது என முன்பே ஆலோசித்து ஆட்சி ஏற்றவுடனே சோதனை நடத்த உத்தரவிட்டார் என்பதை வேறு யாரேனும் நேரு குடும்பம் அல்லாமல் வேறு எவரேனும் காங்கிரஸிலே இருந்து செய்திருந்தால் கூட இந்நேரம் இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஆகச் சிறந்த சாதனையாக போற்றப் பட்டிருக்கும்.
உலக நாடுகளின் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவின் பொருளாதாரத் தடைகள் ஆறே மாதத்திலே விலக்கிக் கொள்ளப்பட்டது மாபெரும் சாதனை. அதை முன் கூட்டியே கணித்திருந்தார் வாஜ்பேயி.
பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டி நம்பி மோசம் போனார். இன்னோர் பிருத்விராஜ் சௌஹானாக! அந்த ஆட்சி ஒரு ஓட்டிலே கவிழ்ந்தது என்பதை பல நாட்கள் ஜீரணிக்க முடியாமல் இருந்தேன். அடுத்த ஆட்சி வந்தவுடனே சரி இதெல்லாம் வேலைக்காகாது விட்டால் திரும்ப திரும்ப ஜெயித்துக்கொண்டே இருப்பார்கள் என மானங்கெட்ட ஊடகங்களை கான்கிரஸ் களவாணிகள் ஏவி விட்டார்கள்.
தங்க நாற்கர சாலைத் திட்டம், ஜிஎஸ்டியை ஆரம்பித்தது, தகவல் தொழில்நுட்ப துறைக்கு உயிரூட்டியது, தனிப்பட்ட ஏற்றுமதி பகுதிகளை ஆரம்பித்து இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலியது, கிராம சாலைத் திட்டம் கொண்டு வந்தது, ஏழைகள் அனைவருக்கும் உணவு திட்டம் என பெரும் திட்டங்களை கொண்டு வந்தார்.
வாஜ்பாயி கொண்டு வந்த இந்த அந்தோத்தியா உணவு திட்டம் தான் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பசிப்பிணி போக்கி எல்லோருக்கும் உணவு என்பதை ஆரம்பித்து வைத்தது. அதை ஆட்டைய போட்டு உணவு பாதுகாப்பு திட்டம் என களவாணிகள் திருடியதும் இங்கே த்ராவிட் த்ராபைகள். அவர்கள் சொந்தமாகக் கொண்டு வந்ததாகச் சொல்லி ஏமாற்றியதையும் பார்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையிலே அன்று என்னைப்போல் ஏகப்பட்ட பேர் இருந்திருக்கிறார்கள் என பின்பு தான் தெரிந்து கொண்டேன்.
எல்லோருக்கும் கல்வி எனும் சர்வ சிக்ஷா அபியான் என திட்டத்தை கொண்டு வந்தது வாஜ்பேயி தான். நாட்டிலே பிறந்த எல்லோருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை அரசியலமைப்பு சட்டத்திலேயே ஏற்றிய மகான் வாஜ்பாயி.
கம்யூனிஸ்டுகளும் சோசிலிஸ்டுகளும் எல்லோருக்கும் கல்வி என கோஷம் போட்டுக் கொண்டும் டப்பா குலுக்கிக் கொண்டும் இருந்த போது அடிப்படை உரிமை என ஆக்கிக் காட்டியவர். அதை பின்னர் கல்வி உரிமைச்சட்டம் என கொத்து பரோட்டா போட்டு இந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களை மட்டும் குறிவைத்து ஒழிக்கும் படியான சட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் களவாணி அரசு.
எல்லோரும் ஒரே மாதிரி படிக்க முடியாது; எனவே வகுப்புகளிலே தேர்வு பெறாமல் போகின்றவர்களுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் எனவும் வாஜ்பேயி திட்டம் கொண்டு வந்தார்.
தங்க நாற்கர திட்டம் போல வாஜ்பேயி கொண்டு வந்த கிராம சாலைகள் திட்டம் பெரிதாக பேசப்படவில்லை! அதன் வெற்றியையும் ஆட்டைய போட்டதன் விளைவு. கிராம சாலைகள் திட்டத்தை வேலைக்காகாது, பண விரயம் என்றே அன்றைக்கு பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் இன்றைக்கு அந்த கிராமசாலை திட்டம் எப்படி கிராமங்களை இணைத்தது என சோசியல் மீடியா இருப்பதால் அறீய முடிகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வந்து போக வசதிகள் செய்தது, வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு நடத்தியது என வெளியுறவு கொள்கையிலேயும் பல சாதனைகள் புரிந்தார்.
பிரான்ஸுக்கு போயிருந்தபோது பிரான்ஸ் அதிபரை இந்தியாவுக்கு அழைக்க வேண்டும்; எப்போது அழைப்பது அதை எப்படி சொல்வது என அதிகாரிகள் யோசித்துக் கொண்டிருந்த போது ஜாக்கிஸ் சிராக் இடம் கவித்துவமாகவே அழைப்பு விடுத்தார்.
இங்கே ஊடகங்கள் என்ன எழுதின தெரியுமா? வாஜ்பேயால் கூட்டத்திலே மட்டுமே பேசமுடியும் தனியறையிலே நாலு பேர் முன்னாடி பேசமுடியாது என.
கம்யுனிஸ்டுகளின் கொடும் நகங்கள் அரசதிகாரத்திலே எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளது என்பதை காட்டி வாஜ்பேயியை பணிய வைக்க முயன்றார்கள். வெங்காய விலை உயர்வு வந்த போது இறக்குமதியானதை கப்பலிலேயே அழுக விட்டார்கள். அப்படி செய்த தேசிய உணவு கழகத்தின் நிர்வாகியை மாற்ற முடியாத அளவுக்கு சக்தி இல்லாமலே அரசை இவ்வளவு தூரம் வெற்றிகரமாக நடத்தினார்.
வாஜ்பாயிதான் முதல் முதலாக முன்னேற்றம், வளர்ச்சி, சுபிட்சம் என்பதை இந்திய அரசியலிலே கொண்டு வந்தார் என இடதுசாரி மானங்கெட்டதுகள் இன்றும் புலம்புகிறது என்றால் புரிந்து கொள்ளவேண்டும். நரசிம்மராவ் கொண்டு வந்த சீர்திருந்ததங்களை மன்மோகன் தலையிலே எழுதிவிட்டு, வாஜ்பாயி செய்ததை முழுமையாக மறக்கடித்ததால் நமக்கே அவர் என்னென்ன செய்துவிட்டு போனார் என விரிவாக தெரியவில்லை.
இப்படி மக்களுக்கு உணவும் கல்வியும் தொழிலும் தொழில்நுட்பமும் முன்னேற்றமும் அளித்ததற்கு மானாங்கெட்ட ஊடகங்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா?
பாப்புலிசம். தமிழிலே சொல்லவேண்டும் என்றால் அடித்தட்டு மக்களுக்கு ஆதரவு அளித்தல். அடித்தட்டு மக்களின் ஏழை மக்களின் குறைகளைப் போக்குவதை கெட்டவார்த்தை ஆக்கி வைத்திருந்தன கம்யுனிஸ்டுகளும் காங்கிரஸும்.
அதை உடைக்க பத்து வருடங்கள் தேவைப்பட்டது. இன்றைக்கு சோசியல் மீடியா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மோடியையும் இப்படியே திட்டியிருப்பார்கள் என்பதும் கவனத்திலெ கொள்ளவேண்டியது.
வாஜ்பாயி செய்த சாதனைகளை மறைத்து அதை தினம் ஒரு திட்டம் அறிவிக்கிறார் என கிண்டலடித்து அதை அவர்கள் பேருக்கு போட்டு, அந்த மாபெரும் மனிதருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு இந்திய மக்களுக்கு துரோகம் இழைத்ததை பார்த்து சகியாமல் பலரும் அரசியல் பேச இயங்க ஆரம்பித்தார்கள். நாட்டுக்காகவும் ஏழை எளிய மக்களுக்காவும் உழைத்த மகானை வழியனுப்பும்போது வாஜ்பாயின் கொள்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி எடுப்போம்.
நாட்டுக்கு உழைக்கும் மோடிக்கும் கட்சியிலேயும் ஆட்சியிலேயும் நமக்காக உழைப்பவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என இயங்குவோம். நமக்காக காலமெலாம் உழைத்த ஆன்மா நீத்தோர் இடத்திலிருந்து நமக்கு அருளட்டும்.
– ராஜா சங்கர் – Raja Sankar




