காபியில் மயக்க மருந்து கொடுத்து… பாலியல் தொல்லை! பிஜேபி., தலைவர் மீது குற்றச்சாட்டு!

Published:

bjp raghunandan ravu - 2026

காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்…. என்று பிஜேபி தலைவர் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

தெலங்காணா பிஜேபி தலைவர் ரகுநந்தன் ராவு தனக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, சிபி சஜ்ஜனாரை சந்தித்து தனக்கு நீதி கிடைக்க வழி காட்டும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிஜேபி தலைவர், கட்சி அதிகார பிரதிநிதி, பிரபல வழக்கறிஞர் ரகுநந்தன் ராவ் மீது இந்த புகார் எழுந்துள்ளது. இதன்படி திங்கள்கிழமை நேற்று (பிப்.3-ஆம் தேதி) சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாரிடம் ஒரு மனுவைக் கொடுத்தார் அந்த பெண். இந்தச் சம்பவம் குறித்து இதற்கு முன்பே மனித உரிமை சங்கத்தை அணுகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மெதக் மாவட்டம் ஆர்சிபுரத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தன் கணவருடன் ஏற்பட்ட வேற்றுமை காரணமாக 2003இல் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். வழக்கறிஞர் ரகுநந்தன் அறிவுரைப்படி தன் கணவர் மீது மெயின்டனன்ஸ் வழக்கு தொடர்ந்தார். அதற்காக 2007இல் ரகுநந்தன் வழக்கு தொடர்பாக தன்னை தன் அலுவலகத்துக்கு வரச் சொல்லி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன் மீது பாலியல் தாக்குதலுக்கு துணிந்தார் என்றும், அவற்றை படமெடுத்து தன்னிடமுள்ள ஆபாச புகைப்படங்களை சமூக தளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி பலமுறை பாலியல் தொந்தரவு செய்தார் என்றும் கூறினார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இரு மாநிலங்களும் இணைந்த மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநந்தன்ராவு பிஜேபியில் முக்கிய தலைவராக உள்ளார். அடிக்கடி தொலைக்காட்சி விவாத மேடைகளில் பங்கு கொள்ளும் அவருக்கு மாநில அளவில் ரசிகர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர். பரபரப்பு ஏற்படுத்தும் இந்த குற்றச்சாட்டு குறித்து அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img