
கடந்த தீபாவளிக்கு பிகில் படம் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் திரைக்கு வந்தது .
இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 80 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாக பேசப்பட்டது.

அப்படியிருக்க, பிகில் படம் தமிழகத்தில் போட்ட பணத்தை எடுத்ததாக பலரும் சொல்லியிருந்தார்கள் , ஆனால், இதை தயாரிப்பாளர் ராஜன் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

திருச்சி விநியோகஸ்தர் பிகில் படத்தின் நிலையை கண்டு பதறி போய்விட்டாராம். ஆனால், ஓரளவிற்கு வசூல் வந்து வட்டி மட்டும் நஷ்டம் ஆனதாம், இதே நிலை தான் செங்கல்பட்டு பகுதிகளிலும் என்று ராஜன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்
மேலும், இயக்குனரின் அதிக செலவு தான் இந்த படத்தின் வசூல் பாதிப்பிற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார் .



