வேலையில் அமர வேண்டுமா..? இந்தியன் ரயில்வே அறிவித்தது ‘புதிய கோர்ஸ்’!

Published:

Rail bhavan - 2026

மாணவர்களுக்காக புதிய கோர்ஸ் அறிவித்துள்ளது இந்தியன் ரயில்வே. நேஷனல் ரயில் டிரன்ஸ்போர்டேஷன் இன்ஸ்டிடியூட் (என் ஆர்டிஐ), யுனிவர்சிட்டி ஆப் பர்மிங்ஹாமுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு புதிய கோர்ஸ் அறிவித்துள்ளது இந்தியன் ரயில்வேஸ் .

இந்த கல்வி ஆண்டிலிருந்தே புதிய கோர்ஸ் ஆரம்பமாகப் போகிறது. இந்தியன் ரயில்வேயில் நல்ல வேலையில் நிலைபெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. இந்தியன் ரயில்வே, மாணவர்களுக்காக புத்தம்புதிய கோர்ஸ் அறிவித்துள்ளது.

railway minster - 2026

இதற்காக பிரிட்டனைச் சேர்ந்த யுனிவர்சிட்டி ஆஃப் பர்மிங்ஹாம் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ரயில்வே போர்டு சேர்மன் வினோத் குமார் யாதவ் யுனிவர்சிட்டி ஆஃப் பர்மிங்ஹாம் சான்சிலர் கரன் பில்லிமோரியா இணைந்து “ஜாயின்ட் மாஸ்டர்ஸ் ப்ரோக்ராம் இன் ரயில்வே சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் அண்ட் இன்டகிரேஷன்” கோர்ஸ் தொடங்கியுள்ளார்கள் .

2020 – 21 கல்வி ஆண்டிலிருந்து இந்த கோர்ஸ் அளிக்க உள்ளார்கள் நேஷனல் ரயில் டிரன்ஸ்போர்டேஷன் இன்ஸ்டிடியூட் NRTI . இந்த கோர்ஸை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் இந்த இரு கல்வி அமைப்புகளில் ஒவ்வொன்றிலும் இருந்தும் ஒவ்வொரு ஆண்டு வீதம் படிக்க வேண்டி இருக்கும். இந்த கோர்ஸை முழுமை செய்தவர்களுக்கு டியூவல் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் எம்எஸ்சி சர்டிபி.கேட் அளிப்பார்கள் அதாவது இரண்டு கல்வி அமைப்புகளிலிருந்தும் போஸ்ட் கிராஜுவேட் டிகிரி கிடைக்கும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img