“வடிவேலு சார் ஸோ க்யூட்”: கம்பேர் பண்ணவே முடியாது! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆச்சர்யம்!

Published:

rashmika mandanna vadivelu compare - 2026

‘என்னை விட வடிவேலு ரொம்ப கியூட்’ என்று மனம் நிறைய சொல்லி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வடிவேலு சார் சோ க்யூட் என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் இந்தப் பதிவுக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு தேசங்களின் இளைஞர்கள் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார்! பளிச் அழகு, பள பள மினுமினுப்பு, அழகான நடிப்பு என ரசிகர்களைச் சுண்டி இழுத்து, சில ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்.

rashmi vadivel - 2026

தற்போது தமிழில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், கன்னடத்திலும் அறிமுகமாகியுள்ளார். தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக இவர் நடித்த பீஷ்மா படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

rashmi vadivel1 - 2026

இந்தப் படத்தை விளம்பரப் படுத்தும் விதமாக ராஷ்மிகா புதிய காஸ்டியூம்களை அணிந்து சிலபல கோணங்களில் போட்டோ ஷூட் நடத்தி அந்தப் படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவை, தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகின்றன.

rashmi vadivel2 - 2026

இந்த நிலையில், அவரது கன்னத்துக் கைவைத்த படத்தையும் உருட்டி மிரட்டி விழித்து பார்க்கும் போஸ்களையும் பார்த்து, தமிழகத்து ட்ரோல் மாஸ்டர் நெட்டிசன்களுக்கு மீம்ஸ்களின் நாயகன் வடிவேலுவின் நினைவுதான் வந்துவிட்டது போல!

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!
rashmi vadivel3 - 2026

அவ்வளவுதான்… வடிவேலுவின் வெவ்வேறு போஸ்களை எடுத்து, ராஷ்மிகா மந்தனாவின் போஸ்களுடன் ஒப்பிட்டு, மீம்ஸ் ரெடி செய்துவிட்டனர்.

வடிவேலுடன் ஒப்பிடப்பட்ட அந்த மீம்ஸ்களைப் பார்த்த ராஷ்மிகா மந்தனா, தனது டிவிட்டர் பக்கத்தில் “என்னால் இதை ஒப்புக் கொள்ள முடியாது, வடிவேலு சார் சோ க்யூட் என்று கருத்துப் பதிவு செய்து, அந்த மீம்ஸ்களின் லிங்கையும் ரீட்வீட் செய்திருக்கிறார்.

Related articles

Recent articles

spot_img