நித்யானந்தாவைப் பிடிக்க… சர்ச் வாரண்ட் பிறப்பிப்பு!

இந்தியா லைஃப் ஸ்டைல்
Nithyananda - 2026

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கியுள்ள நித்யானந்தாவைக் கண்டுபிடிக்க, ‘சர்ச் வாரன்ட்’ பிறப்பித்து ராம்நகர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

பெங்களூரு பிடதி ஆஸ்ரமத்தை நிறுவிய நித்யானந்தா மீது, ராம்நகர் மாவட்ட மூன்றாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாலியல் குற்றச்சாட்டு குறித்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையின் போது, நித்யானந்தா நேரில் ஆஜராவதற்கு அளிக்கப்பட்ட விலக்கு மற்றும் ஜாமின் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பிப்.19ல் நித்தியானந்தாவுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பது தெரியாத காரணத்தால், ஆரைக் கைது செய்ய சர்ச் வாரன்ட் பிறப்பிக்கும்படி, சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி சித்தலிங்க பிரிவு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நித்யானந்தாவைப் பிடிக்க சர்ச் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வாரன்டுக்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை. மேலும், நித்யானந்தாவுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்த நபரை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.