இருமல் சத்தத்தை நீக்கவும்: மாதவன் ட்விட்!

Published:

madi 2 1 - 2026

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் 44 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு, செல்போன்களிலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ‘காலர் டியூன்’ வைத்து உள்ளது.

செல்போனில் அழைப்பவர்களுக்கு முதலில் இருமல் சப்தம் கேட்கிறது. பின்னர் இருமும்போதும், தும்மும்போதும் முகத்தை மறைத்து கொள்ளவும். முகத்தை தொடுவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றெல்லாம் ஆங்கிலத்தில் குரல் ஒலிக்கிறது.

இது குறித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “மற்றவர்களுக்கு போன் செய்யும்போது முதலில் இருமல் சப்தம் கேட்பது மிரட்சியாக உள்ளது. இது மத்திய சுகாதார துறையின் விழிப்புணர்வு பிரசாரம் என்பது பிறகு தெரியவருகிறது.

இது சிறப்பான பணி. ஆனால் ஆரம்பத்தில் வரும் இருமல் சப்தத்தை நீக்கிவிடுங்கள். நான் போனில் அழைக்கும் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

Related articles

Recent articles

spot_img