யெஸ் வங்கி ஓவியம் வாங்கிய தொடர்பு! பிரியங்கா வத்ராவை விசாரிக்கும் அமலாக்கத் துறை!

Published:

priyanka gandhi yes bank - 2026

பிரியங்கா வத்ராவிடம் இருந்து ஓர் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வாங்கியது தொடர்பான சர்ச்சை பெரிய அளவில் அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்து வருகிறது. இந்த ஓவியங்களை விற்பனை செய்தது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரேவை விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பிரியங்கா வத்ராவிடம் இருந்து ரூ. 2 கோடி கொடுத்து யெஸ் வங்கி நிறுவனர் ஓவியங்களை வாங்கியது தெரியவந்தது.

இந்நிலையில் ஓவியங்கள் விற்பனை குறித்து, பிரியங்கா வத்ராவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக எம்.எஃப் ஹுசைனால் வரையப்பட்ட ராஜீவ் காந்தியின் ஓவியத்தை பிரியங்கா விற்பனை செய்தது தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img