கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கபசுரக் குடிநீரை அருந்த தொடங்கியுள்ளனர்.
இயற்கையாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் இந்த குடிநீரை அருந்துகின்றனர். ஆடாதொடை, கற்பூரவள்ளி, திப்பிலி உள்ளிட்ட 15 மூலிகைகள் கொண்டு கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது.
இந்த மருத்துவ குடிநீரை பெரியவர்களுக்கு 40 – 50 மிலி வரை கொடுக்கலாம் எனவும், காலையில் வெறும் வயிறில் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காய்ச்சல் அதிகமாக இருந்தால் மாலை நேரத்தில் கூடுதலாக ஒருவேளை எடுத்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போல ஒருவாரம் தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் எனவும், சிறியவர்களுக்கும் 15 முதல் 20 மிலி வரை இத குடிநீரை கொடுத்துவரலாம் எனவும் மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர்.