ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் கொரோனா ஐசொலேஷன் வார்டில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டதற்கு அமைச்சர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
தெலங்காணா மாநிலம் இதனை சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடினமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
காந்தி மருத்துவமனையில் கரோனா ஐசொலேஷன் வார்டில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி மாலை ஒரு கரோனா நோயாளி இறந்து போனார். அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவருடைய சகோதரர் டாக்டர்களை தாக்கினார். இந்தச் சம்பவம் தெலங்காணா முழுவதும் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
உயிரைப் பணயம் வைத்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களை இவ்வாறு தாக்குவது சரிதானா என்று பரபரப்பாக பேசப்படுகிறது. தெலங்காணா மாநிலம் இதனை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக தண்டிப்போம் என்று எச்சரித்துள்ளது.
காந்தி மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தை தெலங்காணா அமைச்சர்கள் ஈடல ராஜேந்தர் , தலசானி ஸ்ரீனிவாச யாதவ், தெலங்காணா பிஜேபி தலைவர் பண்டி சஞ்சய் தீவிரமாக கண்டித்துள்ளனர்.