ஹிந்துக் கோவில்கள் கொரோனா நோய்க்கான குவாரண்டின் – தனிமைப் படுத்தல் நிலையங்களா? வேறு எங்குமே இடம் கிடைக்கவில்லையா…? என்று குமுறுகின்றனர் ஆந்திரப் பிரதேசத்தில்!
நாளுக்கு நாள் ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகின்றது. டெல்லியில் உள்ள மர்கஜ் பிரார்த்தனைகளுக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதால் மாநிலத்தில் கொரோனா பாசிடிவ் கேசுகளின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இதனால் முன்னெச்சரிக்கையாக நோய் பாதித்தவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் ஆலயங்களில் தங்க வைக்கிறார்கள்.
அவர்களை சந்தித்தவர்களையும் குவாரண்டின் சென்டர்களுக்கு அனுப்பி வருகிறார்கள் அதிகாரிகள். நாளுக்குநாள் நிலைமை தீவிரமாகி வருவதால் நோய் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாகி வருகிறார்கள். அதனால் ஹிந்து ஆலயங்களில் கூட குவாரண்டின் சென்டர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆந்திர பிரதேச அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் முதலாக ஸ்ரீகாலஹஸ்தி, காணிப்பாக்கம் ஆலயங்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த விஷயத்தில் மாநில பிஜேபி தலைவர் கன்னா லட்சுமி நாராயணா தீவிரமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேச முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். வேறு எங்குமே இடமே இல்லாதது போல் ஆலயங்களை குவாரண்டின் சென்டர்களாக ஏற்பாடு செய்வது வருத்தத்திற்குரியது என்று கடிதம் எழுதியுள்ளார்.
ஹிந்துக்களின் மன உணர்வுகளை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்கிறது என்று விமர்சித்துள்ளார். ஆட்சியருடன் கூட பேசுவதற்கு தன் கட்சி தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள் என்றும் ஆட்சியர் நடந்து கொள்ளும் விதம் பொறுப்பற்ற விதமாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் .
இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கன்னா லட்சுமி நாராயணா கோரிக்கை வைத்துள்ளார்.
ஜகன் முதலில் தாம் சார்ந்த சர்சுகளை வழங்கி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கணும்; காணிப்பாக்கம் கோவிலை குவாரன்டைன் சென்டராக கொடுத்துள்ளார்கள். ஏன் ஒரு மசூதியையோ சர்ச்சை யோ கொடுக்கவில்லை என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அங்கும் போய் இவர்கள் துப்பி வைப்பார்களே என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
செருப்பு போட்டுக் கொண்டு கோயிலுக்குப் போகக் கூடாதே… அவ்வாறு செருப்புக் காலோடு உள்ளே போகக்கூடாது என்று அங்கு இருக்கும் போலீசாவது சொல்லக்கூடாதா என்று வருந்துகிறார்கள் பக்தர்கள். ஒரு மசூதிக்கோ சர்ச்சுக்கோ ஹிந்துக்கள் சென்றால் அவர்கள் எவ்வாறு எதிர்ப்பார்கள்? அது தெரியாதா? எங்கே போயிற்று செக்யூலரிசம் என்று ஜகனிடம் கேட்கிறார்கள் பக்தர்கள்!
இந்நிலையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடந்த இரு நாட்களாக பெரிதும் விவாதிக்கப் பட்டு வந்தது. இது குறித்த டிவிட்டர் பதிவுகளில் பலரும் இதனைக் குறிப்பிட்டு, தங்கள் கண்டனங்களையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், இந்த இடத்தின் பின்னணி குறித்து பதிவிட்ட சிலர், இது விநாயகர் கோவில் அல்ல, இது ஒரு தங்கும் விடுதிதான். கோயிலைச் சார்ந்த தங்கும் விடுதி என்பதால் அதில் என்ன குற்றம் காண முடியும் என்று பதில் அளித்தனர்.
அதே நேரம், இது கோயிலைச் சார்ந்த ஒரு கி.மீ., தொலைவுக்கும் குறைவான தொலைவில் உள்ள கணேஷ் சதன் விடுதி என்றும், கோயிலைச் சார்ந்ததாக இருந்தாலும் அங்கே பூஜைகள் எதுவும்கிடையாது என்பதால் அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்றும் சிலர் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் சமூகத் தளங்களின் வழியே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.