December 6, 2025, 1:22 AM
26 C
Chennai

பிரதமருக்கு கடிதம் எழுதிய கமலுக்கு… அர்ஜுன் சம்பத் கண்டனம்!

KAMAL - 2025

கமலஹாசனுக்கு அர்ஜுன்சம்பத் பகிரங்க கடிதம், கண்டன அறிக்கை!

மதிப்பிற்குரிய மக்கள் நீதி மைய தலைவர் திரு கமலஹாசன் அவர்களுக்கு வணக்கம்!

தாங்கள் பிரதமருக்கு எழுதிய கடிதம் கடும் கண்டனத்திற்குரியது!

நாடு முழுக்க இருக்கக்கூடிய மக்கள் நலன் விரும்பிகள் அனைவரும் கொராணா வைரஸ் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்கின்றார்கள்.
ஆனால் தாங்களோ கொராணா எதிர்ப்பில் இருந்து விலகி, மோடி எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறீர்கள்.

மக்களின் உயிர்காக்கும் விஷயத்திலும் தங்களின் மைய அரசியலிலிருந்து விலகி தேச விரோத அர்பன் நக்சல்களின், கிருத்துவ தொண்டு நிறுவனங்களின், இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகளின், குரலை ஓங்கி ஒலிக்கின்றீர்கள். வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், கேப்டன் விஜயகாந்த் அவர்களும் தங்களைப் போலவே நடிப்பு உலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய கட்சித் தலைமையகத்தை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார். அவரது உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றும் நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கெடுத்துக் கொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மெழுகுவர்த்தி ஏந்தி தனது ஒத்துழைப்பை வழங்கியு ரஜினி மக்கள் மன்றம் அன்னதானம் உள்ளிட்ட பல சேவைகளை செய்து வருகிறது. நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களுக்கு உதவி வருகிறது.

சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு நடிகரும் அரசியல்வாதியும் பொறுப்புணர்வோடு செயல்படுகின்றார்கள். ஆனால் தாங்களோ கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், பொறுப்புணர்வு இல்லாமல், மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் கொரானா நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளீர்கள்.

உலக வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் கூட கொராணா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தோற்றுப்போய் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.
சீனாவில் தோன்றிய இந்த கொராண வைரசை எதிர்த்து வென்றிட சார்க் நாடுகள் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை நாடுகிறார்கள். ஆனால் நீங்கள் பிரதமர் மோடியை குறை சொல்கிறீர்கள்.

நீங்கள் ஈவேரா வை பின்பற்றினாலும், அண்ணல் காந்தியை பின்பற்றினாலும், அவர்களை என் தலைவர்கள் என்று சொன்னாலும்,அவர்கள் இப்போது இருந்திருந்தாலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளைப் பாராட்டி இருப்பார்கள்.

ரொட்டிக்கு எண்ணை வாங்க காசில்லாமல் ஏழைகள் அலையும்போது பணக்காரர்களை வைத்து விளக்கு ஏற்றி இருக்கீங்க, பால்கனி அரசியல் செயறீங்க, என்று குற்றம் சாட்டி உள்ளீர்கள். குறையே இல்லாதவனை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள்.

ஆனால் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஏழைகளும், இல்லாதவனும் பட்டினியால் மாண்டு விடக்கூடாது என்பதற்காக மோடி கிச்சன் துவக்கி அனைவருக்கும் உணவளிக்க பாரதிய ஜனதா கட்சி தன் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஐந்து பேருக்காவது உணவு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு தொண்டு செய்து வருகிறது.
மக்கள் நீதி மையம் இதுவரை என்ன சேவை செய்துள்ளது. யாருக்காவது உணவு கொடுக்கும் திட்டம் உங்களிடம் உண்டா? தமிழகத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு நீங்கள் செய்தது என்ன?

எத்தனை காலத்திற்கு இப்படி தேச விரோதிகளுக்கும், நக்சல்களுக்கும், நீங்கள் துணைபோக போகிறீர்கள்! பணமதிப்பிழப்பு நடவடிக்கையை குறை கூறி உள்ளீர்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாகத்தான் கருப்புப்பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு இருக்கிறது. ஏழைகளின் சேமிப்பு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. பாரதப் பிரதமர் மோடியின் லாக் டவுன் நடவடிக்கை நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது. செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் கொரானா வைரசை இந்தியாவில் பரப்பியவர்கள் முழு அடைப்பு நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.
தப்லீக் ஜமாஅத்தின் தலைவர் தலைமறைவாக இருக்கிறார். அவரது கருத்தை எண்ணத்தை நீங்களும் அறிக்கையாக கொடுத்திருக்கிறீர்கள். எப்படியாவது லாக் டவுன் நடவடிக்கையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கின்ற உங்கள் நோக்கம் வெற்றி பெறாது.

உங்களால் முதலாளிகள் என்றும், பணக்காரர்கள் என்றும், விமர்சிக்கப்படுகின்ற டாடா,அம்பானி போன்றோர் கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் உங்கள் நண்பர்களான கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள், திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள், பல கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்திருந்தும் அவர்கள் எத்தனை ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். தொடர்ந்து கொரானா நோயை பரப்பிய சீனாவிற்கு ஆதரவாகவும், தப்லீக் ஜமாத் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவாகவும் பேசியும்,எழுதியும் வருவதைத் தவிர மத்திய, மாநில அரசுகளை விமர்சிப்பதை தவிர வேறு என்ன நன்மை செய்துள்ளார்கள்.

சீன அரசாங்கம் திட்டமிட்டு இந்த நோயைப் பரப்பி இது ஒரு ‘பயோ வார்’ என்கின்ற கண்ணோட்டம் சர்வதேசம் முழுவதும் உள்ளது. சீனாவிடம் நஷ்ட ஈடு கோரி பல நாடுகள் ஐநா மன்றத்தில் முறையிட தயாராகி வருகின்றன. சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நீங்கள் சீன அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரிக்கிறீர்கள். இதைவிட தேசத்துரோகம் வேறு என்னவாக இருக்க முடியும். நீங்கள் மனிதகுலத்திற்கு விரோதியாக மாறி வருகிறீர்கள் என்பதை மனசாட்சியோடு சிந்தித்தால் புரிந்து கொள்வீர்கள்.

சோனியாவின் தாயகமான இத்தாலி சீன வைரஸ் நோய் மூலம் பல உயிர்களை இழந்துள்ளது.நல்லவேளை இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் பிரதமர் நரேந்திர மோடியை தலைவராக பெற்றிருக்கின்றோம். நாடு பாதுகாப்பாக இருக்கிறது.அல்லும் பகலும் இந்த நாட்டிற்காக அயராது பாரதப் பிரதமர் மோடி உழைத்து வருகிறார். மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது அதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டுகின்ற இந்திய விரோதிகளின் செயல்பாட்டிற்கும், கருத்துக்களுக்கும், நீங்கள் ஆதரவாக ஒரு கடிதம் எழுதி சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் மனசாட்சியை கேளுங்கள் பிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களையும் காப்பாற்றுவதற்கு எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதை உங்களுக்கு புரியவைக்கும்.

பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்திற்கு என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேலாவது நீங்கள் மக்களோடு இருங்கள். தேசத்தை நேசியுங்கள்! மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளுகின்ற நோய் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.

அன்புடன்,
அர்ஜுன் சம்பத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories