ஒரு வழியாக நெல்லூருக்குத் திரும்பி வந்த காசி யாத்திரிகர்கள்!

இந்தியா சற்றுமுன்
kasi yatris nellore
kasi yatris nellore

ஒரு வழியாக நெல்லூருக்குத் திரும்பிவந்த காசி யாத்திரிகர்கள்… எஷ்வந்த் சிங்குக்கு குவியும் பாராட்டுகள்…

கடந்த மாதம் தீர்த்த யாத்திரைக்குச் சென்று, நாடு தழுவிய லாக்டௌன் காரணமாக உத்தரப் பிரதேசத்திலுள்ள காசியிலேயே சிக்கிக்கொண்ட நெல்லூரைச் சேர்ந்த 28 பேர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வழியாக சொந்த ஊரான நெல்லூர் வந்தடைந்தார்கள்.

காசியில் இருந்து சென்ற மாதம் 22ஆம் தேதி இவர்கள் அனைவரும் டிரெயினில் திரும்பி வருவதற்கு டிக்கெட் வாங்கி இருந்தார்கள். ஆனால் அன்று நாடு தழுவிய அளவில் லாக்டௌன் விதித்ததால் எங்குமே செல்ல முடியாத நிலைமையில் இவர்கள் அனைவரும் காசியிலேயே சிக்கினார்கள். அங்கேயே ஒரு ஹோட்டலில் தங்கிக் கொண்டு திரும்பி வருவதற்காக பல்வேறு வழிகளிலும் முயற்சித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட நெல்லூர் பிஜேபி தலைவர் யஷ்வந்த் சிங் காசியில் உள்ள தன் நண்பர்கள் மூலம் அங்கிருந்த யாத்திரிகர்களுக்கு தேவையான உணவும் நித்திய வசதிக்காக அரிசி பருப்புகளும் அளிக்க ஏற்பாடு செய்தார்.

பிஜேபி எம்பிக்களோடு இது விஷயமாக கலந்து பேசி அவர்களை தனி பஸ்சில் ஆந்திரப் பிரதேசுக்கு அழைத்து வந்தார்கள். அதிகாரிகளின் அறிவுரைப்படி அவர்களை 14 நாட்கள் குவாரண்டைனில் இருத்தி நேற்று நெல்லூருக்கு அழைத்து வந்தார்கள்.

சௌகரியமாக வீடுகளைச் சென்றடைந்த யாத்திரிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். தம்மை திரும்ப சொந்த ஊருக்கு அழைத்து வர முயற்சித்ததற்கு யஷ்வத் சிங்குக்கு நன்றி தெரிவித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.