tenali art teacher pays tribute to ap cm ys jagan with 12 012 ft painting
tenali art teacher pays tribute to ap cm ys jagan with 12 012 ft painting

ஆந்திரா முதல்வர் ஜெகனின் பெரிய அளவு பெயிண்டிங்… இப்போது தெனாலியில் வருவோர் போவோரை வசீகரிக்கிறது.

கரோனாவை கட்டுப்படுத்த மிகப் பெரிய முயற்சியில் இறங்கியுள்ள ஜகனை பாராட்டும் விதத்தில் 12012 சதுர அடி பெயிண்டிங்கை தெனாலியில் ஆரம்பித்துள்ளார்கள்.

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்துவரும் முயற்சி உலகிற்கே ஸ்பூர்த்தி அளிப்பதாக இருக்கிறது என்று கூறி அதற்கு அடையாளமாக மிகப்பெரிய பெயிண்டிங்கில் அவருடைய உருவத்தை வரைவதற்கு சனிக்கிழமை அன்று குண்டூர் மாவட்டம் தெனாலியில் ஆரம்பித்துள்ளார்கள்.

உள்ளூர் முனிசிபல் மார்க்கெட் சென்டரில் சாலை மீது 78 அடி உயரம் 154 அடி அகலம், மொத்தம் 12012 சதுர அடிகள் அளவில் மிகப்பெரிய பெயிண்டிங்கை வரைந்து வருகிறார்கள்.

இதனை 50 மணி நேரத்தில் முடிக்க உள்ளார்கள். முனிசிபல் பாடசாலை டிராயிங் மாஸ்டர் விஜய் பிரகாஷ், பிற ஆசிரியர்கள், என்சிசி அதிகாரி பெல்லம்கொண்ட வெங்கட், புலி பாஸ்கர், பரிச சர்தார் முதலானவர்களோடு சேர்ந்து இதனை வரைந்து வருகிறார்கள். இந்த மிகப்பெரிய பெயிண்டிங் ரிகார்டு சிருஷ்டிக்கப் போவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

தெனாலி மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் கலை மற்றும் பண்பாடு காரணமாக இது ஆந்திராவின் பாரிஸ் என்று அழைக்கப்படுகிறது. அதோடு மூன்று கால்வாய்கள் தெனாலியில் பாய்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending