test 1

கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 வகையான புதிய அறிகுறிகளும் ஏற்படக் கூடும் என்று, நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சில வகை அறிகுறிகள் ஏற்படும் என்று, ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம், மற்றும் சிடிசி சில பட்டியலை வெளியிட்டிருந்தது.

இதுதவிர, அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், தகவல் வெளியானது. இப்படியான நிலையில், நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா எதிரொலி.. சிறையாக மாறும் அரசு கல்லூரி.. புதிய கைதிகளை தனிமைப்படுத்த முடிவு!

சி.டி.சி, முன்பு வெளியிட்ட கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறி பட்டியலில், இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை இருந்தன. ஆனால் இப்போது கூடுதலாக 6 வகை அறிகுறிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஏதாவது ஒரு அறிகுறி உங்களுக்கு இருந்தாலும், பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

1) கடுமையான குளிர்

2) குளிருடன் உடல் நடுக்கம்

3) தசை வலி

4) தலைவலி

5) தொண்டை வலி

6) சுவை அல்லது வாசனை இழப்பை உணர்வது

வைரஸ் உடலில் நுழைந்த 2-14 நாட்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.டி.சி கொரோனா வைரஸின் அறிகுறிகளை பட்டியலிட்டிருந்தாலும், சில நோயாளிகள் அறிகுறியில்லாமலும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே இந்த அறிகுறி இல்லாதவர்களும் பரிசோதனை நடத்துவது நல்லது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending