ஜூன் 1 முதல் ‘ஏசி இல்லாமல்’ ரயில்கள் இயங்கும்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
train
train

வரும் ஜூன்-1 ஆம் தேதி முதல் ஏசி பெட்டி அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு விரைவில் ஆன்லைனில் தொடங்கும். அனைத்தும் 2ம் வகுப்பு பெட்டிகள். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். ரயில்கள் வழக்கமான கால அட்டவணை படி இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருக்கிறார்.

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தற்போது 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ரயில், விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. 4ம் கட்ட ஊரடங்கின் போது, தற்போது வெளி மாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக ஏசி., அல்லாத 200 ரயில்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த 200 ரயில் பெட்டிகளும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளாகும். ரயில்களில் பயணிக்க விரும்பும் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.