இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை, யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கொரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து ஐசிஎம்ஆர் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியதாவது:
இந்தியா அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. அதற்கான சூழல் இல்லை. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மற்ற பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் பரவும் வேகமும், பாதிப்பின் அளவும் மிக குறைவாகவே உள்ளது.
15 மாவட்டங்களில் 0.73 சதவீத மக்கள் மட்டுமே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கை பலன் அளித்துள்ளதையே இது காட்டுகிறது. ஊரடங்கால் கொரோனா வேகமாக பரவுவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
India is such a large country and prevalence is very low. India is not in community transmission: Prof (Dr.) Balram Bhargava, DG, ICMR, Delhi on COVID19 pic.twitter.com/oFHfZL2cD9
— ANI (@ANI) June 11, 2020
We found that about 0.73% of the population in these 15 districts showed a prevalence of past exposure to infection. It means that lockdown measures were successful in keeping it low and preventing rapid spread: Prof (Dr.) Balram Bhargava, DG, ICMR, Delhi on serosurvey pic.twitter.com/cRu2ZCEReO
— ANI (@ANI) June 11, 2020