முத்தம் கொடுத்து குணப்படுத்துவதாக சொல்லி… கொரோனா தொற்று பரப்பிய அஸ்லம் பாபா மரணம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
corona died aslam baba
corona died aslam baba

முத்தம் கொடுத்து, கொரோனா தொற்று நோயை  குணப்படுத்துவேன் என்று சொல்லி பலருக்கு முத்தம் கொடுத்த முஸ்லிம் மத குரு அஸ்லம் பாபா,  நேற்று மரணம் அடைந்தார். அவர் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய  பலருக்கு கரோனா சோதனை மேற்கொள்ள தேடி வருகின்றனர் அதிகாரிகள்! 

மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் மத குரு அஸ்லம் பாபா, கொரோனா தொற்றில் பாதித்தவர்கள் என் கையை முத்த மிட்டால் கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என்று கூறியிருந்தார். அவரின் பேச்சை நம்பி அப்பாவி மக்கள் சிலர், அவரது கைகளில் முத்தம் கொடுத்துள்ளனர். அதன் மூலம் பலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா என்ற நபர் , கொரோனாவை தாம் குணப்படுத்துவதாக கூறி, தன்னை சந்திக்க வந்த அன்பர்களுக்கு கையில் முத்தம் வைத்தியம் கொடுத்து அருள்வாக்கு கூறிவந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி அஸ்லம் பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று உறுதி செய்தனர். இதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நோயின் தீவிரத்தால் மரணம் அடைந்தார். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  நபரிடம் இருந்து இவருக்கு கொரோனா பரவியதா அல்லது, அஸ்லம்பாபாவிடம் முத்தம் வாங்கி சென்று கொரோனாவை பரப்பியிருக்கிறார்களா என்ற விவாதத்துக்கு அதிகாரிகள் வந்துள்ளனர். 

அஸ்லம் பாபாவிடம் முத்தல் பெற்ற 19 பேர் கண்டறியப்பட்ட நிலையில் அஸ்லம் பாபாவின் தொடர்பால் 24 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக  கண்டறியப் பட்டுள்ளதாகவும் அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில் வைத்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் 

corona died
corona died

இவ்வாறு, ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவுக்கு இணங்க  மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், தீவிரமாக போராடி வருகின்றனர். கொரோனா இந்த வகையில் எல்லாம் பரவும் இன்று கிராம மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் ஆனால் சுற்று குறித்து பல்வேறு விதங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தி வந்த இவ்வாறு அப்பா சிலர் ஏதோ நம்பி ஒருவர் அவற்றை தாங்களும் வாங்கிக்கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.