October 17, 2021, 9:16 pm
More

  ARTICLE - SECTIONS

  இவங்களுக்கு தண்டனை விதிச்சாச்சு! ஆனா தூக்கில் போடத் தான் ஆளில்லை!

  நம் நாட்டில் தூக்கு தண்டனை அமல்படுத்துவது வழக்கம் இல்லை ஆதலால் தூக்கிலிடுபவரை சிறை நியமிக்கவில்லை என்றும் இப்போது தேவை ஏற்பட்டுள்ளதால் காண்ட்ராக்ட் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

  IMG 20191205 WA0006 - 1

  அந்த அரக்கர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தாலும் சிறையில் தூக்கில் போட ஆள் இல்லையாம்.

  தலைநகர் டில்லியில் ஏழு ஆண்டுகளுக்கு முன் தன் நண்பனோடு சென்ற இளம் பெண்ணை ஆறு காமுகர்கள் சமுதாயம் வெட்கி தலைகுனியும் விதமாக பிசாசு போல் மானபங்கம் செய்து பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டார்கள்.

  ஏழு ஆண்டுகால நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளை மரண தண்டனை நெருங்குகிறது.

  மன்னிப்புக் கோரி தாக்கல் செய்த குற்றவாளி வினய் மனுவை டெல்லி அரசு நிராகரித்தது. திகார் சிறையில் உள்ள குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கு ஒரு ஆளை தேடுகிறார்கள் அதிகாரிகள்.

  ஏழு ஆண்டுக்கு முன் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு டெல்லி ஹைகோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். அதுவும் தூக்கு தண்டனையே சரி என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை ஆமோதித்தது.

  அதனால் குற்றவாளிகள் தமக்கு மன்னிப்பு வழங்கக் கோரி ஜனாதிபதிக்கு விண்ணப்பித்தார்கள். தற்போது இந்த விஷயம் ஜனாதிபதியிடம் உள்ளது. புதிதாக வெடரினரி டாக்டர் சம்பவத்தால் நிர்பயா குற்றவாளிகளை உடனே தூக்கில் போட வேண்டும் என்று டிமாண்ட் தீவிரமாக எழுந்துள்ளது.

  இந்த நிலையில் திகார் சிறையில் உள்ள குற்றவாளிகளை உடனே தூக்கில் போடுவதில் சிறை அதிகாரிகளுக்கு சிக்கல் உள்ளது. அவர்களை தூக்கிலிடுவதற்கு சரியான ஆள் கிடைக்காததே காரணம்.

  இன்னும் ஒரு மாதத்திற்குள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அமல்படுத்த பல்வேறு வாய்ப்புகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள் என்று தெரிகிறது . கோர்ட்டு பிளாக் வாரண்ட் வெளியிட்ட உடனே எந்த கணத்திலும் அவர்களை தூக்கில் தொங்க விடலாம்.

  குற்றவாளிகளின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த உடனே இந்த வாரண்டை கோர்ட் வெளியிடும். பார்லிமென்ட் மீது தாக்குதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அப்சல் குருவை தூக்கி லிட்டார்கள். ஆனால் அப்சல் குருவை தூக்கில் போடும் போது கடைசி நிமிடத்தில் நாடகம் போன்ற விளைவுகள் ஏற்பட்டதால் திகார் சிறை அதிகாரிகளே லீவரை இழுத்தார்கள் என்று கூறப்படுகிறது.

  கடந்த கால அனுபவங்களை கவனத்தில் கொண்டு திகார் சிறை அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் மனிதருக்காக அதிகாரபூர்வமற்ற வகையில் தேடுதலை தொடங்கி யுள்ளார்கள். உத்தரபிரதேசத்தின் பல கிராமங்களில் இது போன்ற மனிதர்கள் யார் உள்ளார்கள் என்று தேடுவதாக தகவல்.

  நம் நாட்டில் தூக்கு தண்டனை அமல்படுத்துவது வழக்கம் இல்லை ஆதலால் தூக்கிலிடுபவரை சிறை நியமிக்கவில்லை என்றும் இப்போது தேவை ஏற்பட்டுள்ளதால் காண்ட்ராக்ட் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

  மிக மிக அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுவதால் முழு அளவில் தூக்கிலிடுவதற்கு அதிகாரப்பூர்வ பணியாளரை இதுவரை நியமிக்கும் தேவை ஏற்படவில்லை.

  அதுமட்டுமின்றி இந்த பிரிவில் முழு அளவு ஊழியரை தேர்ந்தெடுப்பது கூட மிகக் கடினம் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  இது இவ்வாறு இருக்க தன் கருணை மனுவுக்கு அனுமதி அளிக்கும்படி நிர்பயா வழக்கில் குற்றவாளியாக உள்ள வினய் பெட்டிஷன் தாக்கல் செய்துள்ளான். ஆனால் அவனுடைய விண்ணப்பத்தை டெல்லி அரசு நிராகரித்தது.

  வினய் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினாலும் அதனை பரிசீலித்த டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அதனை நிராகரிக்க வேண்டும் என்று லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜலை கேட்டுக்கொண்டுள்ளார்.

  பெடிஷனர் மிக மிக கொடூரமாக ஒரு பெண்ணை மானபங்கம் செய்து கொண்டுள்ளான் என்பதை கவனத்தில் இருத்தி பெடிஷனை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  கவர்னர் பரிசீலித்த பின் மத்திய உள்துறைக்கு அனுப்புவார். அது பின் ஜனாதிபதியிடம் போகும். மீதி குற்றவாளிகளான முகேஷ், பவன், அக்ஷய் மட்டும் ராஷ்டிரபதிக்கு இன்னும் பெட்டிஷன் அனுப்பவில்லை. ஆதலால் அவர்களுக்கு ஒரு வார கால அவகாசம் அளித்து உள்ளார்கள்.

  2012 டிசம்பர் 16 அன்று நடந்த நிர்பயா கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களுள் ராம் சிங் திகார் சிறையில் 2013 மார்ச்சில் தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு குற்றவாளி மைனர் ஆகையால் மூன்றாண்டு தண்டனைக்கு பின் விடுதலை செய்யப்பட்டான்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,561FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-