டாக்டர் பெண் கொலை குற்றவாளிகளுக்கு ஒரு வார காவல் விசாரணைக்கு அனுமதி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
hyderabad four accused - 2026

திசா குற்றவாளிகளின் ஒரு வார போலீஸ் கஸ்டடிக்கு கோர்ட்டு அனுமதி.

திசா வழக்கு குற்றவாளிகளை ‘விசாரிப்பதற்கு’ போலீசாருக்கு ஏழு நாள் கஸ்டடி அனுமதி அளித்து புதன்கிழமை டிசம்பர் 4 மாலை ஷாத்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் நான்கு குற்றவாளிகளிடமும் ஒருவார கால விசாரணை நடத்துவதற்கு கோர்ட் போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஷாத்நகரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்முறை கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் தற்போது செர்லப்பல்லி சிறையில் ரிமாண்ட் கைதிகளாக உள்ளனர்.

இவர்களை சைபராபாத் போலீஸார் வியாழன் காலை கஸ்டடியில் எடுத்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

இந்த வழக்கில் இதுவரை யிலேயே மூன்று பிரத்தியேக குழுக்கள் களத்தில் இறங்கி முழுமையான விவரங்களை சேகரிக்கும் பணியில் உள்ளன.

திசா வழக்கின் முழுமையான விசாரணையின் ஒரு பகுதியாக வழக்கு தொடர்பான முக்கிய விவரங்களை அறிவதற்காகவும் ஆதாரங்களை சேகரிப்பதற்கும் போலீசார் இவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

திசாவின் செல்போன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனை என்ன செய்தார்கள்? எங்கே தூக்கி எறிந்தார்கள்? சம்பவத்திற்குப் பின் லாரியை மீண்டும் ‘தொண்டுபல்லி’ கேட் அருகிலேயே ஏன் பார்க் செய்தார்கள்? இதுபோன்ற இன்னும் பல மிஸ்ட

விடை தெரியாத கேள்விகள் உள்ளன. இவற்றை கண்டுபிடிக்க உள்ளார்கள்.

திசாவை கொலை செய்தபின் பெட்ரோல் ஊற்றி எரித்தார்களா?அல்லது உயிரோடு எரித்தார்களா? என்ற விஷயத்திலும் இன்னும் சந்தேகம் உள்ளது.

போலீஸ் விசாரணையில் இந்த விவரங்களின் முடிச்சு அவிழ்க்கப்படும் என்று தெரிகிறது.

அதோடு சீன் ரீ கன்ஸ்ட்ரக்ஷன் செய்யும் வாய்ப்பு கூட உள்ளது .அதன் மூலம் சம்ஷாபபாத் டோல் கேட்டில் இருந்து ‘சடான்பல்லி’ வரை நடந்த சம்பவங்கள் தொடர்பான விவரங்களை முழுமையாக அறிய உள்ளார்கள். இதன் மூலம் கொலை குறித்த இன்னும் சில முக்கிய விபரங்கள் வெளிப்படும் வாய்ப்புகள் உள்ளன.

சீன் ரீ கன்ஸ்டிரக்ஷன் தொடர்பான விவரங்களைக் கூட கோர்ட்டுக்கு சமர்ப்பிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் குற்றவாளிகள் மீது பொதுமக்கள் மிகப்பெரும் ஆத்திரம் கொண்டுள்ள இந்த தருணத்தில் இதனை எந்த அளவு செய்ய இயலும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மறுபுறம் வழக்கு விசாரணைக்காக பிரத்தியேக fast-track நீதிமன்ற ஏற்பாட்டுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் இந்த வழக்கில் பரிபூரண விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு முடிந்தவரை விரைவாக தண்டனை விதிக்கும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.