வீட்டிலேயே யோகா செய்யுங்க… குடும்பத்தாரோடு யோகா செய்யுங்க… : அழைக்கிறார் பிரதமர்!

Published:

modi yoga
modi yoga
  • வீட்டிலேயே யோகா செய்யுங்கள். குடும்பத்தாரோடு யோகா செய்யுங்கள்…
  • நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு.
  • சர்வதேச யோகா தினம் 2020 இன்று ஜூன்21.

கரோனா நெருக்கடி நேரத்தில் யோகாவை வீட்டிலேயே இருந்து செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் வியக்கும் வண்ணம் நடத்தி வருபவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த முறை கரோனா பரவுதல் இருப்பதால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவரவர் வீட்டில் அவரவர் குடும்பத்தாரோடு சேர்ந்து யோகா செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கூறியுள்ளார்.

modijiyoga
modijiyoga

6ஆவது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களை நடத்திவரும் நாம் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும் என்று மோடி கூறினார்.

யோகாவுக்கு பாப்புலாரிட்டி பெருகி வருவது குறித்து மிகவும் ஆனந்தமாக இருப்பதாக கூறிய அவர் இந்த கரௌனா ஆபத்துக் காலத்திலும் இதனை நடத்துவது ஒரு சவால் என்றார். இந்த முறை யோகா தீம் – வீட்டிலேயே யோகா… குடும்பத்தோடு யோகா… என்று கூறிய மோடி உலகம் கரோனாவோடு போராடுகின்ற நேரத்தில் யோகா பலவித ஆரோக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கிறது என்றார்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் யோகா மிகவும் பயன் அளிக்கிறது என்று கூறினார்.

இது மனதினை சுறுசுறுப்பாக வைக்கிறது. யோகாவினால் அனைவருக்கும் பலப் பல நன்மைகள் உள்ளன. நம்மை மேலும் பலமாக ஆக்குவதில் யோகா பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று மோடி கூறினார்.

யோகாவில் மக்கள் புதுப்புது ஆசனங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நம் ஒற்றுமையை யாரும் விலக்க இயலாது என்று கூறிய பிரதமர் யோகாவால் ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img