கொரோனா: தொற்று குணம் அடைந்தோரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மறுக்கும் குடும்பத்தினர்!

இந்தியா சற்றுமுன்
corono positive

ஹைதராபாத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினர் அழைத்துச் செல்ல மறுப்பதால், அரசு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காந்தி மருத்துவமனையின் கொரோனா கண்காணிப்பு அதிகாரியாக இருக்கும் டாக்டர் பிரபாகர் ராவ் இது பற்றி கூறுகையில், கொரோனா பாதித்து குணமடைந்த சுமார் 50க்கும் மேற்பட்டோரை அழைத்துச் செல்ல குடும்பத்தினர் மறுப்பதால், அவர்கள் அரசு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதித்து குணமடைந்திருந்தாலும், அவர்கள் மூலமாக தங்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக குடும்பத்தினர் அச்சம் கொண்டு குணமடைந்தவர்களையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறார்கள். இதுபோல சுமார் 60 பேர் உள்ளனர். குடும்பத்தினரை சமாதானம் செய்ய தொடர்ந்து முயன்று வருகிறோம்.

தற்போது ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் இயற்கை சிகிச்சை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொரோனா பாதித்து குணமடைந்த 93 வயது மூதாட்டி மட்டும், மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.