குழந்தைங்க விரும்பும் பன்னீர் மில்க் ஸ்வீட்!

Published:

panneer milk

பன்னீர் மில்க் ஸ்வீட்
தேவையான பொருட்கள்
வெண்ணெய் 50 கிராம்
பால் ஒரு கப்
பால்பவுடர் அரை கப்
துருவிய பன்னீர் ஒன்னரை கப்
சர்க்கரை அரை கப்
பாதாம்

முதலில் ஒரு பேனில் வெண்ணை போட்டு உருக்க வேண்டும் பிறகு அதனுடன் பால் சேர்க்க வேண்டும்

பால் கொதித்த உடன் பால் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்க வேண்டும்

பின்னர் துருவிய பன்னீர் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஏழிலிருந்து பத்து நிமிடம் கைவிடாமல் கிளற வேண்டும்

பேனில் ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதை 20 நிமிடம் ஆற வைக்கவேண்டும்

பின் சர்க்கரையை தூள் செய்து இந்த கலவையுடன் கலந்து ஒரு பத்து நிமிடம் அப்படியே விட வேண்டும் பிறகு தேவையான வடிவத்திற்கு பிடித்துக் கொள்ளலாம்
உருண்டையாகவோ அல்லது தட்டையாகவோ ஸ்வீட்டின் மீது அழகுக்காக பாதாம் வைத்துக்கொள்ளவேண்டும் இப்போது சுவையான பன்னீர் மில்க் ஸ்வீட் ரெடி

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img