அந்த ஆட்சில 50.. இப்போ 25.. குறைந்த நிவாரணத் தொகை! மனம் குமுறும் மருத்துவர்கள்!

Published:

doctors
doctors

கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் கொரோனா தொற்றி உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண உதவியை திமுக அரசு 25 லட்சம் ரூபாயாக குறைத்துள்ளது டாக்டர்களை கவலை அடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பிறகு மார்ச் 20ந் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களப்பணியாளர்களாக களம் இறங்கியுள்ளனர் மருத்துவர்கள்.

சென்னையில் கொரோனா உச்சத்தில் இருந்த போது ஒரே டாக்டர் ஒரே நாளில் மூன்று ஷிப்டுகளை எல்லாம் பார்க்கும் நிலை இருந்தது. இதே போல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு கொரோனா தாக்கும் ரிஸ்க் மிக அதிகம்.

ஆனால் இதனை பொருட்படுத்தாமல் தங்கள் உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

மேலும் மருத்துவர்கள் கொரோனா பணியில் இருந்த காரணத்தினால் தங்கள் வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு வீட்டிற்கு சென்றால் குடும்பத்தினருக்கு கொரோனா தாக்கும் அபாயம் இருந்தது. இதனால் மருத்துவர்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அறை ஏற்பாடு செய்து அவர்களை அங்கேயே தங்க வைத்து மருத்துவ பணிகளில் அதிமுக அரசு ஈடுபடுத்தி வந்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இதற்கிடையே எதிர்பார்த்ததை போலவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்ற ஆரம்பித்தது. கொரோனா தொற்றுக்கு ஆளானா மருத்துவர்கள் உயிர் இழக்கும் நிலையும் ஏற்பட்டது.

இதனை அடுத்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அறிவித்ததை போலவே கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் உடனுக்கு உடன் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டது.

அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மருத்துவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியது போதாது ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அறிக்கை வெளியிட்டார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்த காலகட்டத்தில் மற்றும் அதற்கு முன்பு என சுமார் 43 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிக்க வேண்டியிருந்தது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு வலியுறுத்தியதை ஏற்று மருத்துவர்களின் குடும்பத்திற்கான நிதி உதவியை 1 கோடி ரூபாயாக உயர்த்துவார் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

ஆனால் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிவிப்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை பார்த்து அதிர்ந்தது மட்டும் அல்லாமல் ஏமாற்றமும் அடைந்துள்ளனர் மருத்துவர்கள்.

கடந்த ஆண்டு எதிர்கட்சியாக இருந்த போது மருத்துவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறிவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கனவே அதிமுக அரசு வழங்கி வந்த 50 லட்சத்தையும் 25 லட்சமாக குறைத்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று மருத்துவர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இனி எல்லாமே இப்படித்தான் இருக்குமோ என்று மருத்துவர்கள் கவலை தெரிவிக்கவும் ஆரம்பித்துள்ளனர்

Related articles

Recent articles

spot_img