பவானி சாகர் அணை நாளை திறப்பு: ஓ.பன்னீர் செல்வம்

சற்றுமுன்

panneerselvam சென்னை: பாசனத்துக்காக பவானி சாகர் அணை நாளை திறக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையிலிருந்து அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம் போக பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டத்திலுள்ள, பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம் போக பாசனத்திற்கு மார்ச் 10–ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது. இதனால், ஈரோடு மாவட்டம், கோபி செட்டி பாளையம் மற்றும் பவானி வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.