விற்பனை செய்யும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட நாடு அவசியம் குறிப்பிட வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான்!

Published:

03 June04 ram vilas baswan

தங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட நாடு குறித்த விவரங்களை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் தெரியப்படுத்துவது கட்டாயம் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், ஒரு பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதை பொருளில் பதிவிட்டு தெரிவிக்க வேண்டும்.

இந்த சட்டம் 2018 முதல் அமலில் உள்ளது. இந்த விதிகளுக்கு அனைத்து நிறுவனங்களும் கட்டுப்படும். இதுகுறித்து அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொருளின் எம்.ஆர்.பி., காலாவதி ஆகும் தேதி, அதன் அளவு, எடையுடன், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற தகவலும் இடம் பெற வேண்டும். அதற்கு உட்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related articles

Recent articles

spot_img