ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

school - 2026

ஜூன் 3ந் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று – தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த முறை கடும் வெயில் மற்றும் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல்கள் தொடங்கப்பட்டதால் வழக்கத்துக்குச் சற்று முன்னதாகவே பள்ளிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட்டது

எனவே நீண்ட விடுமுறையை இந்த வருடம் மாணவர்கள் கழித்துள்ளனர். கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேல் விடுமுறையை அனுபவித்து விட்டு தற்போது ஜூன் மாதம் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர் மாணவர்கள்!

இந்த வருடம் ஜூன் மூன்றாம் தேதி திங்கள்கிழமை என்று பள்ளிகள் துவங்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும் இன்னும் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

ஆயினும் நீண்ட விடுமுறை விடப்பட்டதால் பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாறுதலும் இருக்காது என்று கூறப்படுகிறது@ மேலும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன@ எனவே மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவர் என்று பெற்றோர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.