dr-tamilisai-soundarrajan
dr-tamilisai-soundarrajan

பிளாஸ்மா தானம் கொடுப்பதற்கு கொடையாளிகள் முன்வர வேண்டும் என்று தெலங்காணா கவர்னர் தமிழிசை கோரிக்கை விடுத்தார்.

சனத்நகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையை பார்வையிட்ட கவர்னர் அங்குள்ள ரத்தநிதி நிலையத்தை பரிசீலித்தார். அதன்பின்பு ஊடகத்தாரோடு உரையாடுகையில் பிளாஸ்மா தானத்தினால் பலரின் உயிர் காப்பாற்றப்படுகிறது என்றார். ஆனால் அனைவரும் பிளாஸ்மாவை தானம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் யாரிடமிருந்து பெறலாம் என்று முடிவெடுப்பார்களோ அவர்களிடமிருந்து மட்டுமே பிளாஸ்மாவை சேகரிப்பார்கள் என்றும் தமிழிசை கூறினார்.

பிளாஸ்மா தானம் செய்பவர்களை ஒன்றாக ஒரு மேடையில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

கொரோனா அடையாளங்கள் இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனாவால் யாரும் உயிர் இழக்கக் கூடாது என்பதே என் கோரிக்கை. பிளாஸ்மா தெரபியின் மூலம் கொரோனா பாதித்தவர்களை காப்பாற்ற முடியும். ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பிளாஸ்மா தெரபிக்கு அனைத்து வசதிகளும் உள்ளன. கொரோனாவிலிருந்து மீண்டெழுந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்று கோருகிறேன். அப்படிப்பட்டவர்கள் ஈஎஸ்ஐ மருத்துவ மனைக்கு செய்தி தெரிவிக்க வேண்டும் என்று தமிழிசை கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிளாஸ்மா தானம் செய்த சந்தோஷ் என்ற என்பவரை கவர்னர் பாராட்டினார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending