அம்மா எழுதிய ‘அப்பா’வின் வரலாறு: கண்கலங்கிய ஒய்எஸ்ஆர் ஷர்மிளா!

Published:

ysr-sharmila
ysr-sharmila
  • தாய் எழுதிய புத்தகம் குறித்து… ஒய்எஸ் ஷர்மிளா உணர்ச்சிகரமான கருத்து.
  • வாசகர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள்.

மறைந்த ஆந்திரா முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அவருடைய மனைவி விஜயம்மா ‘நாலோ நாதோ ஒய்எஸ்ஆர்’ (என்னில் என்னோடு ஒய்எஸ்ஆர்) என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.

ஒய்எஸ்ஆர் 71வது பிறந்த நாளன்று சென்ற வாரம் ஜெகன்மோகன் ரெட்டி அந்த புத்தகத்தை வெளியிட்டார்.

ysr-jagan-mohan
ysr-jagan-mohan

விஜயம்மா எழுதிய ஒய்எஸ்ஆர் வாழ்க்கை வரலாறுக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவில் டிமாண்ட் ஏற்பட்டு ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் புத்தகங்கள் மிகப்பெரும் அளவில் விற்பனையாகி வருகின்ற நிலையில் ஒய்எஸ்ஆர் மகள் ஒய்எஸ் ஷர்மிளா ஞாயிறன்று ஆர்வமூட்டும் கருத்துக்களை தெரிவித்தார்.

‘மனம் நிறைய அப்பாவின் ஞாபகங்கள். 35 ஆண்டுகால அனுபவங்களுக்கு புத்தக வடிவம் அளித்து உலகத்திற்கு அப்பாவை புதுமையாக அறிமுகம் செய்துள்ளார் அம்மா. தெலுங்கு புத்தகங்களின் விற்பனையில் நாலோ நாதோ ஒய்எஸ்ஆர் புதிய ரெக்கார்டுகளை சாதித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புத்தகம் குறித்து உங்கள் அனைவரின் யோசனைகளை சோஷியல் மீடியாவில் மெசேஜ்கள் மூலம் எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று ஷர்மிளா ட்வீட் செய்துள்ளார்.

ysr-reddy
ysr-reddy

இந்த மாதம் எட்டாம் தேதி நாலோநாதோ ஒய்எஸ்ஆர் நூல் வெளியீடு நிகழ்ச்சியின்போது ஷர்மிளா உரையாற்றுகையில் அப்பாவின் வாழ்க்கைச் சிறப்புகள் குறித்து புத்தகத்தில் மிக அருமையாக விளக்கி உள்ளார் என்றும் இதயத்தை தொடும் விதமாக உள்ளது என்றும் அதை படிக்கும் போதெல்லாம் அம்மா அப்பாவோடு சேர்ந்து நாமும் பயணம் செய்வது போல் தோன்றுகிறது என்றும் உண்மையை கூறுவது கஷ்டமே ஆனாலும் விஜயம்மா அந்தப் பணியை தைரியமாக செய்துள்ளார் என்றும் ஒய்எஸ்ஆர் அனைவருக்கும் ஊக்கமூட்டும் மனிதர் ஆதலால் அம்மா இந்த புத்தகத்தை எழுதினார் என்றும் கூறினார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img