ஆடி அமாவாசைன்னு… குற்றாலத்துக்கு யாரும் வந்துடாதீங்க..!

Published:

courtallam1
courtallam1 – file picture

ஆடி அமாவாசை என்று எண்ணிக் கொண்டு, வழக்கம் போல் திதி, தர்ப்பணம் செய்யலாம் என்று எவரும் குற்றாலம் அருவிக் கரைப் பக்கம் வந்துவிடாதீர்கள் என்று எச்சரித்துள்ளனர் அதிகாரிகள்.

சீஸன் என்று பெரிதாக இந்த வருடம் களை கட்டாவிட்டாலும், குற்றாலத்தில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. ஆனால், குளிப்பதற்கு என்று எவரும் அனுமதிக்கப் படுவதில்லை. கொரோனா காலம் என்பதாலும், ஊரடங்கு அமலில் உள்ளதாலும், உள்ளூர்க் காரர்களைக் கூட போலீஸார் அனுமதிப்பதில்லை. எனவே அருவிப் பகுதி மிகவும் தூய்மையாக, ஆளரவமற்றுக் கிடக்கிறது.

courtallam-main-falls
courtallam-main-falls

இந்த நிலையில், குற்றாலத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லை. மேலும் கோவில் நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து 144 தடை அமலில் இருப்பதால் மிகவும் உன்னிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருக்கிறார்கள். எனவே, குற்றாலத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம் என நம்பி யாரும் வர வேண்டாம் என்று நிர்வாகத்தின் தரப்பில் செய்தி அளிக்கப் பட்டது.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

Related articles

Recent articles

spot_img