ரூ.10000 தா.. குளிக்கும் வீடியோவை வெளியிடுவேன்! மிரட்டிய முகநூல் காதலன்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம்
karthi
karthi

முகநூல் மூலம் காதல் வலை வீசி பெண்களின் ஆபாச புகைப்படங்களை பெற்று கொண்டு மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கூவத்தூர் காரன்குப்பத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த கார்த்தி பல்வேறு பகுதிகளில் சமையல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் முகநூல் மூலம் புதுச்சேரியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியிடம் நட்பாக அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் அவருக்கு காதல் வலை வீசி இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலிக்கும் போது அந்த பெண் குளிப்பது போல் வீடியோவை வாங்கி கொண்ட கார்த்தி தன் செல்போனில் வைத்து கொண்டார்.

bath video - 2026

பின்னர் படிப்பு செலவுக்காக வேண்டும் என இரண்டு முறை 5,000 ரூபாயை வாங்கி உள்ளார். மேலும் 10,000 கேட்க குளியல் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

கார்த்தியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் தன் தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார். அதன்பின்னரும் அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்து ரூ.50,000 தரவேண்டும் என கூறியுள்ளார். அந்த பெண்ணின் தந்தை காவல்த்துறையில் அளித்த புகாரை தொடர்ந்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கார்த்தியின் முகநூல் மற்றும் செல்போனை வைத்து இருக்கும் இடத்தை அறிந்து கைது செய்தனர். பின்னர் காவல்நிலையத்தில் நடத்திய விசாரணையில் இது போன்று 10 பெண்களுக்கு மேல் ஏமாற்றி பல ஆயிரம் ரூபாய் பறித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.