December 5, 2025, 1:13 PM
26.9 C
Chennai

திருப்புகழ் கதைகள்: ராமாயணத்தில் லங்கா தகனம்!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 66
திருப்புகழில் இராமாயணம் – லங்கா தஹனம்
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆஞ்சநேயர் இலங்கையைக் கொளுத்திய தகவலை அருணகிரிநாதர் மற்றோர் இடத்தில் சொல்லிகிறார். இதோ அந்தப் பாடல்.

இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
ளிலெங்கணு மிலங்கென …… முறையோதி
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் …… மருகோனே
(திருப்புகழ் 700 தலங்களில் வரும் – பெருங்குடி)

இலங்கையில், ஆஞ்சநேயர் நெருப்பு வைத்தபோது சில வீடுகள் தப்பித்தன. அது எப்படி என்பதை அழகாகவும் தெளிவாகவும் இப்பாடல் கூறுகிறது. ‘‘இலங்கையின் வீடுகளில் அருள் இல்லாதவற்றை நீ இருந்து பற்றிக் கொள்!’’ என்று சொல்லிச் சொல்லி, நெருப்பு வைத்தார் அனுமார்.

எனவே, அருள் உள்ளம் கொண்ட விபீஷணன் போன்றோரின் வீடுகள் தீக்கு இரையாகாமல் தப்பித்தன.. சீதாப்பிராட்டியாரைத் தரிசித்த ஆஞ்சநேயர், இராமரிடம் தகவல் சொன்ன பிறகு, நடந்த முக்கியமான நிகழ்ச்சி அணை கட்டியது. அதைச் சொல்லும் திருப்புகழ் வரிகள்

கடிது லாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு மிக்க
மலைகள் போட ஆழி கட்டி …… யிகலூர்போய்க்
களமு றானை தேர்நு றுக்கி
தலைக ளாறு நாலு பெற்ற
அவனை வாளி யால டத்தன் …… மருகோனே
(திருப்புகழ் – 1316 – துடிகொள் நோய் – பழமுதிர்ச்சோலை)

lanka dahanam - 2025

வேகமாக வீசும் வாயு பகவான் பெற்ற அனுமாரும், வாலி மகன் அங்கதனும் ஏராளமான மலைகளைக் கொண்டு வந்து போட, கடலில் அணை கட்டி, பகைவனான இராவணனுடைய ஊருக்குப் போனார்கள். பகைவனது ஊராகிய இலங்கையை அடைந்து, போர்க்களத்தில் யானைப்படையையும் தேர்ப்படையையும் தூளாக்கி, பத்துத் தலைகள் கொண்ட இராவணனை அம்பினால் கொன்ற அண்ணல் இராமபிரான் கதையும் இப்பாடலில் சொல்லப்படுகிறது.

இதன் பிறகு இராம-இராவண யுத்தம்தான். போர்க்களத்தில் இராமரது பாணங்களுக்கு ஈடு கொடுக்க முடி யாமல் தவித் தான் இராவணன். அவன் உடலில் ராம பாணங்கள் துளையிட்டன. இராவணன் துடித்தான். திருப்புகழ் வரிகள் இதை விவரிக்கின்றன.

தலைமுடி பத்துத் தெறித்து ராவண
னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு
தநுவைவ ளைத்துத் தொடுத்த வாளியன் …… மருகோனே
(திருப்புகழ் 633 முலையை மறைத்து – கழுகுமலை)

அப்போதும் இராவணன் திருந்தவில்லை. இராமரை வணங்கி மன்னிப்புக் கேட்க வில்லை. தனது தவறை உணரவில்லை. அவன் தோள்களையும் பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளினார் இராமர்.

வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்
சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ
மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் …… மருகோனே
(திருப்புகழ் 489 இணங்கித் தட்பொடு – சிதம்பரம்)

இவ்வாறு முருகப் பெருமானைப் பாடிய அருணகிரியார், ஊடாக இராமரின் கதையையும் பாடிவைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories