spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சமத்துவம் மனதில் தோன்ற என்ன செய்ய வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!

சமத்துவம் மனதில் தோன்ற என்ன செய்ய வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!

- Advertisement -
abinav vidhya theerthar

ஒருவர் தான் ஏற்பாடு செய்திருந்த ஒரு பெரிய விருந்திற்கு உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து இருந்தார். விருந்திற்கு வந்தவர்களில் ஒருவர் சரியான சாப்பாட்டுப் பிரியர். அதேசமயம் சொற்ப உணவை உண்ணும் ஒரு குழந்தையும் விருந்தில் கலந்து கொண்டது. ஒருவருக்கு இனிப்பு பண்டங்கள் பிடிக்கும் ஆனால் மற்றொருவருக்கு பிடிக்காது. இவ்வாறு பல்வேறு சுவை கொண்டவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் விருந்து வழங்குபவர் நான் பாரபட்சமாக நடந்து கொள்ளக்கூடாது என்று எல்லோருக்கும் ஒரே அளவாகத்தான் உணவைப் பரிமாற வேண்டும் அதுதான் சமத்துவம் என்று நினைத்தார்.

அதன் விளைவாக விருந்தின் முடிவில் சாப்பாட்டு பிரியர் என்னை விருந்துக்கு அழைத்து விட்டு பசியோடு அனுப்புகிறேர்கள் என்று முணுமுணுத்தார். அந்த குழந்தையோ உணவை வீணாக்கக் கூடாது என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டதால் குழந்தை இலையில் பரிமாறியதை எல்லாம் ஒன்றுவிடாமல் சாப்பிட்டது அதனால் அது வயிறு பருத்து வலியால் அவதிப்பட்டது.

இனிப்பு உணவினை வெறுத்தவரும் நான் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் எனக்கு இந்த இனிப்பை மூன்று தடவை பரிமாறினாய் என்று கோபித்துக்கொண்டார்.

என்று சிறிதுசிறிதாய் விருந்துக்கு வந்திருந்த அனைவருக்கும் இப்படி ஏதோ ஒரு குறை இருந்தது.

இதற்கு மாறாக வேறொரு விருந்தளிப்பவர், அழைத்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு உணவு பரிமாறினார்

விருந்துக்கு வந்திருந்த அத்தனை பேரும் நன்றாக பசியாறி சந்தோஷத்தோடு வீடு திரும்பினார்கள்

நாடகம் பார்க்க அரங்கத்திற்கு செல்வார்கள் ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாத்திரம் பிடித்திருக்கும். பிடித்த குணாதிசயம் உடைய பாத்திரத்தை விரும்புவார்

இன்னொருவர் சாந்தம் பிடித்திருக்கும் அவர் பீஷ்மராய் நடிப்பவரின் சாந்தமான நடிப்பை மிகவும் பாராட்டுவார் ஒருவருக்கு வீரம் பிடிக்கும் அவர் அர்ஜூனனின் பாத்திரத்தை சிலாகிப்பார்

வாழும் பலதரப்பட்ட பார்வையாளர்களை கொண்ட மானுடமும் அவ்வாறே பலதரப்பட்ட வேறுபாடுகள் சுவைகள் குணங்கள் கொண்டிருந்தாலும் தர்மத்தை கடைப் பிடித்து அதர்மத்தை கைவிட வேண்டும் என்பதே நமது சாஸ்திரங்கள் ஒருவனுக்கு இடைவிடாத அறிவுறுத்துகின்றன.

கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கடமையை சரியாக ஆற்றுவதன் மூலம் ஒருவன் வெற்றி அடைகிறான் என்று கூறுகிறார் எவரொருவர் பல்வேறு மனிதர்களிடத்திலும் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் செய்யத் தகாதவை தவிர்த்து செய்யப்பட வேண்டிய வைகளை செய்து தனது தர்மத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வருகின்றாரோ அவருடைய நடத்தையில் நிச்சயமாக சமத்துவம் குடிகொண்டிருக்கும்.

அப்படிப்பட்ட சமத்துவமாய் அவரின் நடத்தையானது பலவித ரசனைகளை கொண்டு பார்வையாளர்களை ஒரே மாதிரி மகிழ்விக்கும் நாட்டிய நாடகத்தை போலவும் தன்னுடைய விருந்தினர்கள் அனைவரையும் ஒரே மாதிரி திருப்தி செய்வித்த விருந்தோம்பியவரைப் போல உள்ளது என்று சொல்லலாம்.

ஒருவனுடைய மனம் பல விதமான விருப்பு வெறுப்புகளை நிரம்பியிருக்கும் ஆசையினால் விருப்த்தினால் காமத்தினால் குரோதத்தினால் கோபத்தினால் தூண்டப்பட்டவர்கள் அதர்மத்தின் வழி தவறி சென்று விடுவார்கள்.

தன் மகட்பாற் கொண்ட பாசத்தினால் திருதிராஷ்டரனுக்கு விதுரர் தரக்கூடிய பயனுள்ள அறிவுரைகளை அவரால் கடைபிடிக்க முடியாமல் போய்விட்டது

துரியோதனன் சிறுவர்களாய் இருந்த போது தர்மனின் மேல் ஏற்பட்ட வெறுப்பினால் அவனது உயிரைப் பறிக்க முயற்சித்தான். ஒருவனுடைய நடத்தையில் உண்மையான சமத்துவம் ஏற்படுவதற்கு தடையாக இருப்பவை அவனுடைய விருப்பு வெறுப்புகளே. இத்தகைய விருப்பு வெறுப்புகளை ஒருவன் தன் இடத்தில் இருந்து நீக்கிவிட்டால் அவனுடைய மனநிலையில் சமத்துவம் ஏற்படும்.

அப்படிப்பட்ட நடப்பை கொண்டவன் ஓர் இடம் மட்டும் பற்று வைக்கமாட்டான் கோபப்படுபவர்கள் இடம் வெறுக்கவும் மாட்டான்

ஒருவன் தரும நெறியிலிருந்து எப்பொழுதும் நழுவாமல் இருப்பாராயின் அவருடைய நடத்தையில் சமத்துவம் இருக்கும். தர்ம நடத்தை ஒன்றுதான் சமத்துவத்தை அடைவது அதுவே அவனை உன்னத மனநிலையில் சமத்துவத்தை அடைவதற்கு வழி செய்யும் வளாகம்.

மனதில் உள்ள சமநிலைக்கும் வெள்ளை நிறத்திற்கும் சமத்துவத்துக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe