திருமலை அர்ச்சகரின் அந்திமக் கிரியைகள்… ஆலயத்தில் இருந்து சென்ற ‘அக்னி’!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tirupathi-archagar-srinivasa
tirupathi-archagar-srinivasa

திருமலை ஆலயப் பகுதியில் முதல் கொரோனா மரணம். ஸ்ரீ வாரி ஆலய முன்னாள் பிரதான அர்ச்சகர் ஶ்ரீனிவாசமூர்த்தி தீக்ஷிதர் காலமானார். அவரது அந்திமக் கிரியைகளுக்கு ஆலயத்தில் இருந்து அக்னி எடுத்துச் செல்லப் பட்டது.

பரம பவித்ரமான புண்ணியத்தலம் திருமலையில் உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருகிறது . 160 பேருக்கு மேலாக திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், தொழிலாளர்கள், ஆலய
அர்ச்சகர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஸ்ரீவாரி ஆலயம் முன்னாள் பிரதான
அர்ச்சகரை கொரோனா பலி வாங்கியுள்ளது. வைரஸ் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகையில் முன்னாள் பிரதான அர்ச்சகர் ஸ்ரீநிவாச மூர்த்தி காலமானார். திங்கள் அன்று விடியற்காலையில் அவர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர் ஸ்ரீநிவாச மூர்த்தி தீக்ஷிதர் விடியற்காலை காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஸ்ரீனிவாச மூர்த்தி தீக்ஷிதர் மரணம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தர்மகர்த்தா மண்டலி தலைவர் ஒய்வி சுப்பாரெட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

சீனிவாச மூர்த்தி ஸ்ரீவாரி ஆலய பிரதான அர்ச்சகர் ஆக சேவையாற்றினார். ஶ்ரீவாரி ஆலயத்தில் வம்ச பாரம்பரியமாக சேவையாற்றுபவர் யாராவது பரமபதம் எய்தினால் ஆலய சம்பிரதாயத்தின் படி நடைபெற வேண்டிய காரியங்களை நடத்துவார்கள்.

அந்திமக் கிரியைகளை ஆலய மரியாதையோடு அதன்படி நிர்வகித்தார்கள். இதற்காக சந்தனக்கட்டை, ஒரு பரிவட்டம் , அக்னி, டோலு, நாதஸ்வரம், பஞ்சமுகம், பொட்டுவில் இருந்து ஒரு ஊழியர் ஸ்ரீவாரி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து அந்திமக் கிரியைகள் நடத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.