சிறுவனிடம் ரூ.100 லஞ்சம் கேட்ட அதிகாரிகள்! இல்லை என்று சொன்னதால் தள்ளி விடப்பட்ட முட்டை வண்டி! வைரல் வீடியோ!

இந்தியா சற்றுமுன்
egg

கடந்த மாதம்தான் மத்திய அரசு இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது, இருந்தும் பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி அதிகாரிகளால் சிறுவனுக்கு நிகழ்ந்த கொடுமை இணையத்தில் வைரலாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாலையோரத்தில் தள்ளுவண்டிக் கடையில் முட்டைகள் விற்றுக்கொண்டிருந்த 14 வயதுச் சிறுவனிடம், அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகள் 100 ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

egg-1

அந்தச் சிறுவன் இன்னும் வியாபாரம் ஆகாததால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளான். அப்போதும் விடாத அவர்கள், பணம் தரவில்லையெனில் நாளை இந்த இடத்தில் கடை நடத்த முடியாது எனக் கூறியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கில் வியாபாரம் குறைவாகத்தான் செல்கிறது அதிலும் பங்கு கேட்டால் என்ன செய்வது என அந்தச் சிறுவன் கேட்டதற்கு, கடுப்பான அதிகாரிகள் அவனின் வண்டியைக் கீழே கவிழ்த்து அனைத்து முட்டைகளையும் உடைத்துள்ளனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில் வெள்ளை நிற உடையணிந்திருந்த பெயர் தெரியாத சிறுவன், அதிகாரிகளை நோக்கி ஏதோ வசை பாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.