அழைத்ததும் வராத 4 வயது மகள்! ஆத்திரத்தில் கொலை செய்த தாய்!

Published:

kolakara thai - 2026

தன் பேச்சைக் கேட்காத குறும்புத்தனம் செய்த மகளை சுவரில் மோதி கழுத்தை நெரித்து தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புனேவைச் சேர்ந்த 22 வயதான சவீதா என்ற இளம்பெண்ணிற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. அவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இரண்டாவது குழந்தை பிறந்தது.

அவர் இப்போது தனது கணவர் மற்றும் 4 வயது மகள், 6 மாத மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த சூழலில், சவீதாவின் மாமியார் கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான் இறந்துள்ளார். அந்தச் சடங்கில் கலந்துகொள்ள வீட்டிலிருந்த எல்லோரும் ஊருக்குச் சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் விரக்தியில் இருந்த இளம்பெண் விளையாடிக் கொண்டிருந்த தனது 4 வயது மகளை அழைத்துள்ளார். அப்போது அவர் வராததால் தன் பேச்சை கேட்கவில்லை என்ற கோபத்தில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மகளை சுவரில் மோதி தொண்டையை நெரித்து தாயே கொன்ற சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், அங்கு சென்ற போலீசார் முதல்கட்டமாக அவரை கைது செய்தனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இது குறித்து காவல்துறை அதிகாரி ராம்நாத் கூறும்போது, கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான், அப்பெண்ணின் மாமியார் இறந்துள்ளார். அதற்குள் இப்படியொரு கொலை நடந்துள்ளது.

சவீதாவின் கணவர் ஒரு டாக்ஸி டிரைவர். அவர் வெளியே சென்றிருந்தபோது இக்குற்றத்தை சவீதா செய்துள்ளார் என்று குறிப்பிடுகிறார். இப்போது சவீதா சிறையில் உள்ளார்.

Related articles

Recent articles

spot_img