நடிகர் மோகன்பாபு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மர்ம நபர்கள் கொலை மிரட்டல்!

Published:

mohanbabu - 2026

மர்ம நபர்கள் நடிகர் மோகனாபாபுவின் வீட்டு கேட்டை உடைத்துக்கொண்டு உள்புகுந்து எச்சரித்துச் சென்றனர். ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள திரைப்பட நடிகர் மோகன் பாபுவின் இல்லத்தில் பதற்றம் நிலவியது.

வெளியான செய்திகளின்படி, மர்ம நபர்கள் சிலர் எம்.யூ.வி வாகனத்தில் ஷம்ஷாபாத்தில் உள்ள மோகன்பாபுவின் பங்களா வீட்டிற்குள் பலவந்தமாக அத்துமீறி நுழைந்து மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள் என்று நடிகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடையாளம் தெரியாத சிலர் ஷம்ஷாபாத் ஜல்லப்பள்ளியில் உள்ள மோகன்பாபுவின் வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது வீட்டின் காவலாளி எச்சரிக்கையாக இல்லை என்று கூறப்படுகிறது.

ஏபி 31 ஏஎன் 0004 டொயோட்டா இன்னோவா காரில் சுமார் நான்கு பேர் மோகன் பாபுவின் வீட்டின் வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அவரை எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “நாங்கள் உங்களை விடமாட்டோம்” என்று குற்றவாளிகள் கத்தினார்கள்.

அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து இந்த எதிர்பாராத எச்சரிக்கை மோகன் பாபுவின் வீட்டில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நடிகரின் குடும்பத்தினர் உடனடியாக போலீசில் பஹதிஷரீஃப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

மோகன் பாபுவுக்கு இந்த எச்சரிக்கையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தேடி வருகின்றனர். நடிகர், கல்வியாளர், அரசியல்வாதியான மோகன்பாபுவை எச்சரிக்க வேண்டிய அவசியம் யாருக்கு உள்ளது என்பது குறித்து ஆராயப்படுகிறது. இது வேடிக்கைக்காக செய்தவர்களா அல்லது இது கடுமையான அச்சுறுத்தலா என்பதும் கண்டறியப்பட வேண்டியுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img