உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
amitsha - 2026

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது! கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இது குறித்து அமித் ஷா தமது டிவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தனக்கு கொரோனா பாதிப்பு குறித்த தொடக்க கால அறிகுறிகள் காணப் பட்டதாகவும், இதை அடுத்து, கொரோனா சோதனை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ள அமித் ஷா, அந்த சோதனையில் தமக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது உடல் நிலை நல்ல முறையில் இருப்பதாகவும், ஆனாலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அமித் ஷா.

தன்னுடன் கடந்த காலத்தில் சில நாட்களாக நேரடியாக வந்து அளவளாவியவர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தங்களது ஆரோக்கியம் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாகவும் அமித் ஷா தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.