பள்ளிகள் திறப்பும், ஷிப்ட் முறையும்.., மத்திய அரசின் அறிவுறுத்தல்!

Published:

school

செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும்.

இதனிடையே பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் சில முக்கிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அவை பின்வருமாறு..

வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்தவும் பள்ளிகள் அறிவுறுத்தப்படும்.

ஒவ்வொரு ஷிப்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கலாம்,

காலை 8 மணியில் இருந்து 11 மணி வரை ஒரு ஷிப்ட், மாலை 3 வரை 2-வது ஷிப்ட் என வகுப்புகள் நடைபெறும்.

ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img