ஏப்ரல் 21, 2021, 5:01 மணி புதன்கிழமை
More

  தடை செய்யப் பட்ட செயலிகள் இன்றி… புதிய எம்.ஐ., இயங்கு தளத்துடன் ஸியோமி!

  இந்த நிலையில் Xiaomi நிறுவனம் புதிய அறிவிப்பை செய்துள்ளது. இதுவரை இந்தியாவிற்கென்று தனியாக MIUI பதிப்பு

  xioami
  xioami

  அனைத்து ஆன்ட்ராய்ட் மொபைல்களுமே ஒன்று எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாத ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை கொண்டிருக்கும் அல்லது அந்தந்த மொபைல் நிறுவனங்கள் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் சில பல வசதிகள் / அவர்கள் மொபைலுக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்து மேம்படுத்தி கொடுப்பார்கள். 

  Xiaomi நிறுவனம் அதன் மொபைல்களில் MIUI என்ற இயங்குதளத்தை கொண்டுள்ளது. அதாவது அந்தந்த ஆன்ட்ராய்ட் பதிப்புகளில் இவர்கள் மாற்றியமைத்த ஒன்று. இது ஆன்ட்ராய்ட் உபயோகிப்பாளர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஒன்று. 

  இந்த மாதிரி அடிப்படை இயங்குதளத்தை மாற்றித் தரும் பொழுது சில செயலிகளை ப்ரீ-இன்ஸ்டால் செய்து தருவது வழக்கம். இது ஒவ்வொரு மாடலுக்குமே மாறும். சில சீன நிறுவனங்களின் மொபைல்களில் UC Browser அல்லது clean மாஸ்டர் போன்ற செயலிகளை கொண்டிருக்கும். சில tiktok போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

  இந்திய அரசு பல சீன செயலிகளை தடை விதித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த நிலையில் Xiaomi நிறுவனம் புதிய அறிவிப்பை செய்துள்ளது. இதுவரை இந்தியாவிற்கென்று தனியாக MIUI பதிப்பு எதுவும் அவர்கள் வெளியிட்டதில்லை. இப்பொழுது பல செயலிகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பை செய்துள்ளனர். இந்த அறிவிப்பின் படி இந்தியாவிற்கென்று புதிய MIUI பதிப்பு விரைவில் வரும். இப்பொழுது அது தயாராகி கொண்டிருக்கிறது.

  இந்த புதிய பதிப்பில் தடைசெய்யப்பட்ட செயலிகள் எதுவும் இருக்காது. அதே போல் இது அனைத்து Xiaomi மொபைல்களுக்கும் கிடைக்கும். இன்னும் சில வாரங்களில் இந்த அப்டேட் வரும்.

  இந்திய உபயோகிப்பாளார் விவரங்கள் அனைத்தும் 2018ல் இருந்து இந்தியாவில் உள்ள சர்வர்களில் மட்டுமே சேகரித்து வைக்கப்படுகிறது. அவை மற்றவர்களுடன் பகிரப் படுவதில்லை. இதுதான் அந்த அறிவிப்பின் சாராம்சம். முழு கடிதமும் கீழே உள்ளது.

  • கார்த்திக் லக்ஷ்மிநரசிம்மன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »