Back to home என்று முகநூலில் ஆசையாய் பதிவிட்டு விமானம் ஏறியவர்! உயிரிழந்த சோகம்!

இந்தியா சற்றுமுன்
kerala-acc-1

ஒரே ஒரு நிமிடம் மனிதனின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது. அப்படி கண் இமைக்கும் நேரத்தில் நடத்த ஒரு கோர கேரள விமான விபத்து இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு செய்தியாகவும், எண்ணிக்கையாகவும் தெரிந்தாலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு பின்னால் பல நூறு கதைகள் இருக்கும்.

அப்படி ஒரு நெஞ்சை உலக்கும் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. சரஃபு பிலசேரி என்பவர் தன் மனைவி மற்றும் மகளுடன் துபாயில் இருந்து விமானத்தில் கேரளா வந்தவர்.

kerala-acc-2

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சரஃபு துபாயில் விமானத்தில் ஏறியதும் வீட்டிற்கு திரும்புகிறேன் என்று மன மகிழச்சியோடு பேஸ்புக்கில் பதிவிட்டார். மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பியையும் பதிவேற்றி இருந்தார். ஆனால் அவரது மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

kerala-acc

கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் சரஃபு உயிரிழந்தார். நல்வாய்ப்பாக சரஃபுவின் மனைவியும், மகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இருவரும் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனக்கு பிடித்தமான தன்னுடைய ஊருக்கு மகிழ்ச்சியாக திரும்பிய சரஃபு, சடலமாக வீட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது எல்லோர் மனதையும் கனக்கச் செய்துள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.