கொரோனா: தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பிய அபிஷேக் பச்சன்!

இந்தியா சற்றுமுன் சினிமா
abishek-batchan

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன் (77), அவரது மகன் அபிஷேக் பச்சன் (44) ஆகியோா் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.

abishek-batchan-1

முன்னதாக, அமிதாபின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய் (46), அவரின் பேத்தி ஆராத்யா (8) ஆகியோா் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பூரண குணமடைந்து சமீபத்தில் வீடு திரும்பினா்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

இன்று மதியம், எனக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் முடிவாகியுள்ளது. கொரோனாவை என்னால் வெல்ல முடியும் என்று சொன்னேன் அல்லவா! எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.