செப்டம்பரில் பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு?

Published:

school

கொரொனா தொற்று குறைந்தால் செப்டம்பர் மாதம் பள்ளி- கல்லூரிகளை திறக்க பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன.

ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அடுத்தடுத்து மத்திய அரசு ஊரடங்கு என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தபோதும் கூட, பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனிடையே, கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்தே பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து அசாம், ஆந்திரா மாநிலம், மேற்குவங்கம், கோவா ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் மாதம் பள்ளிக் கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related articles

Recent articles

spot_img