கரூரில்… ஆர்.எஸ்.எஸ். குருபூஜை விழா அழைப்பு!

திருச்சி லைஃப் ஸ்டைல்
rss-flag
rss-flag

கரூரில் ஆர்.எஸ்.எஸ் குருபூஜை விழா வரும் ஆக.13 அன்று நடைபெறுகிறது. இது குறித்து கே.சிவசாமி கூறிய போது…

நமது தாய் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின்(RSS) இந்த வருட குருபூஜை விழாவானது வருகின்ற 13.8.2020 வியாழக்கிழமை, பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் K.V.ராஜேஷ் அலுவலகத்தில் (கரூர் மேற்கு பிரதட்சிணம் ரோடு காமாட்சி அம்மன் கோவில் எதிர்ப்புறம் மாடியில்) காலை 11.00 மணிக்கு நடைபெறும்.

அன்று காலை துஜம் (கொடி) ஏற்றப்படும். துஜம் ஏற்றியவுடன் 11.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை துஜம்(கொடி) ஏற்றப்பட்டிருக்கும். மாலை 6.00 மணிக்கு சங்க பிரார்த்தனையுடன் துஜம் (கொடி) இறக்கப்படும்! நம்முடைய நிர்வாகிகள் அனைவரும் காலை 11.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கே.வி. ராஜேஷ் அலுவலகத்திற்கு சென்று துஜத்துக்கு மரியாதை செலுத்தி குரு காணிக்கை வழங்கலாம்!

நம்முடைய நிர்வாகிகள் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்தில் அவசியம் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். என்று மாவட்ட தலைவர் K.சிவசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.