இப்படி மாமியார் கிடைச்சா அதிர்ஷ்டம் தாங்க: மருமகளுக்காக நாக்கை வெட்டிக் கொண்டு பேச்சை இழந்த மாமியார்!

Published:

Screenshot_2020_0818_185313

காணாமல் போன மருமகளை மீட்பதற்காக தனது நாக்கை வெட்டிக்கொண்ட மாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் லக்சுமி நிரலா. இவர் அங்குள்ள பகுதிகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இவரது மருமகள் ஜோதி அவரது குழந்தையுடன் காணாமல் போனதாகத் தெரிகிறது. இதனையடுத்து நிரலாவின் கணவரான நந்துவும் அவரது மகனும் கடந்த வெள்ளிக்கிழமை முழுவதும் ஜோதியைத் தேடி அலைந்துள்ளனர். ஆனால் ஜோதி கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மருமகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த லக்சுமி நிரலா, கடந்த ஞாயிற்றுக் கிழமை கடவுளிடம் தனது மருமகள் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிளேடால் தனது நாக்கை வெட்டியுள்ளார்.

நாக்கை வெட்டிக் கொண்ட நிரலா, ஆரம்பத்தில் மருத்துவமனைச் சென்று சிகிச்சை பெற அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்திய அவரது உறவினர்கள் லச்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து அவரது கணவரான நண்டு கூறும் போது ” யாரோ ஒருவர் லச்சுமியிடம் கடவுளுக்கு நாக்கை காணிக்கையாக்கினால் ஜோதி வீடு திரும்பி விடுவார் எனக் கூறியுள்ளார். இது முதல் முறையல்ல இது போன்ற நடவடிக்கைகளில் லக்சுமி பலமுறை ஈடுபட்டுள்ளார்.” என்று கூறினார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இச்சம்பவம் குறித்து காவலர்கள் கூறும் போது ” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிரலா குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரால் இனி பேச இயலாது என்றனர்”

Related articles

Recent articles

spot_img