ரவுடியை பிடிக்க சென்ற பொழுது காவலர் உயிரிழப்பு!

Published:

Screenshot_2020_0818_184319

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடி கும்பலை பிடிக்கச் சென்ற போது வெடி குண்டு வீசப்பட்டதில் காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணக்கரை வனப்பகுதியில் ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கு குற்றவாளி ரவுடி துரைமுத்து பகுதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான காவலர்கள் ரவுடி துரைமுத்துவை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

அந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டைய தொடங்கிய காவல்துறை, ரவுடி துரைமுத்து உளிட்ட கூட்டாளிகள் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கினர்.

Screenshot_2020_0818_184339

அப்போது, ரவுடிகள் தரப்பில் இருந்து காவலர்கள் நாட்டு வெடி குண்டு வீசப்பட்டுள்ளது. காவலர் சுப்பிரமணியன் மீது குண்டு பட்டு வெடித்ததால், அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் வெடி குண்டு வெடித்ததில் ரவுடி துரைமுத்தும் உயிரிழந்துள்ளார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img