5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து! 200 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

Published:

Maharastra

மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் 5 மாடி கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், வீட்டிற்குள் இருந்த மக்கள் சிக்கியுள்ளதாக தெரிய வருகிறது. மொத்தமாக சுமார் 200 க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய மீட்பு படையினர் மற்றும் மாநில மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்போது வரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்களை மீட்க்கும் பணியானது விரைந்து நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img